தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஜூன், 2014

ஜீரண கோளாறு போக்கும் பெருங்காயம்!

பெருங்காயம் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும், ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது.
பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது. ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும்.இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.
பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு தான் தெரியும்.
வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை ஈடுகட்டும்.
ஜீரண கோளாறு
செ‌ரியாமை, ம‌ந்த‌ம், பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய்‌ப்பு, வ‌யி‌ற்றுவ‌லி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு பொ‌ரி‌த்த பெரு‌ங்காய‌ம், உல‌ர்‌ந்த துள‌சி இலை சம அளவு எடு‌த்து சூரண‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.
பித்தம்
வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும்.
பல்வலி
பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும்.அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.
ஆஸ்துமா தொந்தரவு
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.
அடிக்கடி தலைசுத்தல்
50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பு, சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்டலில் வைத்துக் கொண்டு தலைச்சுத்தல், வயிற்றுப்பொறுமல், பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
ஆண்மை அதிகரிக்க
சமையல் பொருளான பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.
சளியை போக்கும்
சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது.
பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக