தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 ஜூன், 2014

அழிவின் விளிம்பில் சிரியா கோட்டை

சிரியாவின் பழமை வாய்ந்த நினைவுச்சின்னமானது அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
900 வருட நினைவுச் சின்னமான “THE CRAC DES CHEVALIERS” என்று அழைக்கப்பட்ட நினைவு சின்னம் சிரியா நாட்டின் உள்நாட்டுப் போரில் அழிக்கப்பட்டு வருகின்றது.
இங்கு வாழும் உள்நாட்டு கிராம மக்களும், புரட்சியாளர்களும், சிரியா அரசாங்கத்தின் இராணுவ தாக்குதல்களிலுருந்து, தங்களது உயிரைக் காத்துக் கொள்ள இந்த 900 வருட கோட்டைக்குள் தஞ்சம் புகுந்து, ஒளிந்து கொண்டு, தாக்குதலுக்கு தப்பித்துக் கொள்கின்றனர்.
ஆயினும், இவர்கள் இக்கோட்டைக்குள் பதுங்கியிருப்பதை அறிந்து கொண்ட சிரிய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்த கோட்டையை எல்லா திசைகளிலும் தாக்கிக் கொண்டே உள்ளனர்.
சென்ற மார்ச் மாதத்தில் சிரிய அரசாங்கத்தின் துருப்புக்கள், இந்த 900 வருட கோட்டையை முற்றுகையிட்டு, பீரங்கி டாங்குகள் மூலம் தாக்குதல் நடத்தியும், விமானத்தின் மூலம் குண்டு மழை பொழிந்தும் நாசப்படுத்தி, அழித்துக் கொண்டே வருகின்றது.
இந்த கோட்டைக்குள் சுமார் 9000 கிராம மக்களும், புரட்சியாளர்களும் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பதை அறிந்தே இந்த தாக்குதல் வேட்டை சிரிய அரசாங்க இராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த 900 வருட கால கோட்டை, ஒரு சரித்திரக் கால நினைவுச் சின்னமாக ஐக்கிய நாடுகள் சபையில் குறிக்கப்பட்டு,
பாதுகாக்கப்பட்டு வந்துள்ள கோட்டை என்பதை அறிந்தும் சிரிய இராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு, இந்த கோட்டையை அழித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக