தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 மே, 2014

சத்து மிகுந்த பச்சை பயிறு சட்னி !

பொதுவாக பயிறு வகைகளில் பச்சைப் பயிறு அதிக சத்துக்களை கொடுக்கிறது.
பச்சை பயிறை கடைந்தோ அல்லது நீரில் ஊற வைத்து முளைக்கட்ட வைத்து தான் சாப்பிடுவோம்.
ஆனால் அந்த பச்சை பயிறை சட்னியாக செய்து, தோசை அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருப்பதுடன், உடலுக்கு சத்தானதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சை பயறு - 1 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயத் தூள் – 1
சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சை பயிறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொண்டு, அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள பச்சை பயிறை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு அரைக்க வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், பச்சை பயறு சட்னி ரெடி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக