தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 22, 2014

கைகுலுக்குவதால் ஏற்படும் ஆபத்து - ஆய்வில் தகவல் -நாங்க சொன்னா யார் கேட்கிறா??

கைகுலுக்குதன் என்னும் பாரம்பரிய வழக்கமானது நோயாளிகளிடையே வியாதியை பரவ செய்கிறது என அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னிய பல்கலைகழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகரீக உலகில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும்போது கைகுலுக்கி கொள்வது வழக்கம். அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அறிமுகமாகும் நபர்கள் கைகுலுக்கி கொள்வது என்பது தெரிந்ததே.
இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. பழமையான கிரேக்கவாசிகள் இது பற்றி கூறும்போது, பொதுவாக இந்த கைகுலுக்கல் அமைதியை தெரிவிக்கும் விதமாகவும், ஒருவரது திறந்த உள்ளங்கை அவரது நேர்மை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் ஆரம்பமாகியுள்ளது. உள்ளங்கைகளை காட்டும் இந்த வழக்கம் மாறி தற்போது காணப்படும் கைகுலுக்கும் முறைக்கு முன்னேறியுள்ளது.
இது வாழ்த்து சொல்வது அல்லது புறப்படுவது, ஆறுதல் தருவது, மரியாதை, நட்பு, அமைதி, நல்ல விளையாட்டு வீரராக அடையாளப்படுத்துதல் அல்லது வழக்கமான ஒப்பந்தம் ஆகியவற்றின் சர்வதேச அடையாளமாக மாறி விட்டது. தனிநபரின் முக்கியத்துவத்தை தாண்டி கைகுலுக்குதல் என்பது வணிக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை கருதுவதாகவும் உள்ளது.
ஆனால், மார்க் ஸ்கிளான்ஸ்கி என்பவர் தலைமையில் நடந்த ஆய்வில், சமீப காலங்களில் கைகளின் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. அவை நோய் தொற்று ஏற்படுத்தும் காரணியாக இருப்பதால், மருத்துவமனை மற்றும் பிற சுகாதார மையங்களில் கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு பரிந்துரைப்பதும் மற்றும் கொள்கைகள் வகுப்பதும் அவசியமாகிறது.
சுகாதார நல பணியாளர்கள் நோயாளிகளின் வழியே தங்களது கைகளில் நோய் பாதிப்பு ஏற்படுத்தி கொள்கின்றனர். நோய் பரவலை குறைப்பதற்கான முயற்சிகள் ஒரு புறம் எடுக்கப்பட்டாலும், வழக்கமான நோயாளிகள் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை தொடர்புகளால் சுகாதார நல பணியாளர்களின் கைகள் நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றன என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
கைகுலுக்குவதால் பொது இடத்தில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கு இணையாக தீங்கு ஏற்படுவதுடன், இருவருக்கு இடையேயான கைகுலுக்குதலால் மெர்ஸ் நோய் பரவும் அபாயமும் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. எனவே, கைகுலுக்குவதற்கு பதிலாக புதிய வழி ஒன்றின்படி அதனை மாற்றி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நோயாளிகள் கைகுலுக்குவதை நிறுத்தி கொள்வது உதவி புரியும்.
கைகுலுக்க ஒருவர் முற்படும்போது மற்றவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பது தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தும் அவமரியாதை என கருதாமல், நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை அங்கீகரிக்கும் ஒன்றாக அது இருக்கும். எனவே, கைகளை காற்றில் அசைப்பது மற்றும் குனிந்து வணங்குவது ஆகியவை இதற்கு மாற்றாக இருக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
http://www.newsonews.com/view.php?22eMM302lOK4e2BnBcb280Cdd308Wbc2nBLe43Oln0236AS3

No comments:

Post a Comment