தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

உங்களுக்கு பிடிக்குமா கண்ணாமூச்சி! இதில் மறைந்திருக்கும் ரகசியங்கள்!

குழந்தைகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு என்றால் அலாதி பிரியம்.
அட பெரியவங்களும் குழந்தைகள் போன்று சில நேரங்களில் விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இந்த விளையாட்டுக்குள் இருக்கிற ரகசியங்களையும், குழந்தைகளோட மனவளர்ச்சிக்கு எப்படி உபயோகமாக இருக்கு என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு பண்ணி சொல்லி இருக்கிறார்கள்.
குறிப்பாக சிறு குழந்தைகளின் மனதில் உள்ள பயத்தை முற்றிலுமாக நீக்கிட உபயோகமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்தாகும்.
இதுதொடர்பாக மூன்று வயது குழந்தைகளிடம் கண்ணாமூச்சி விளையாட்ட விளையாட சொல்லி ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
குழந்தைகளோட கண்களை கட்டிவிட்டு, சிறு தொலைவில் அவர்களின் பெற்றோர்கள் நின்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.
உடனே குழந்தைகள் சத்தம் வந்த திசையை நோக்கி சென்றுள்ளனர், இவர்களை பின்தொடர்ந்து ஆய்வாளர்கள் சென்றுள்ளனர்.
இதில் மொத்தம் 37 குழந்தைகள் பங்கெடுத்தாலும், வெறும் 7 குழந்தைகளால் மட்டுமே தங்களது பெற்றோர்களை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், குழந்தைகளின் மகிழ்ச்சி, சிரிப்பொலி, முகமலர்ச்சி போன்ற உணர்வுகளை மேம்படுத்த இந்த வகையான விளையாட்டுகள் உதவும்.
இந்த விளையாட்டுகளை 6 மாத பருவத்திலிருந்து மூன்று அல்லது நான்கு வயது வரை விளையாடும் போது தனது பெற்றோரின் அடையாளங்களையும், குரல் ஒலியினையும் அடையாளம் தெரிந்து கொண்டு அவர்களிடம் சென்று அடைய மனரீதியான மேம்பாட்டிற்கும், மன வளர்ச்சிக்கும் உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக