தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 மார்ச், 2014

அணு இயலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!!


அணு இயலின் தந்தை என அறிவியல் அறிஞர்களால் போற்றப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
கடந்த 1879ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி ஜேர்மனியின் ஊல்ம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
இவருடைய தந்தை ஹெர்மன் ஐன்ஸ்டீன், தாய் பாலைன் ஐன்ஸ்டீன்.
குழந்தை பருவத்தில் இருந்தே மந்த புத்தி உடையவராக விளங்கிய ஐன்ஸ்டீன், மற்ற குழந்தைகளை போன்று ஓடியாடி விளையாட விரும்ப மாட்டார்.
சிறு வயதிலேயே பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார், இவரது பேச்சுக்கள் குளறலாகவே வெளிப்படும்.
பள்ளியில் சேர்க்கப்பட்டாலும், ஒரு சிறைச்சாலை போன்றே வகுப்பறை இருந்தது.
மற்ற பாடங்களை வெறுத்தாலும் கணிதம், பௌதிகத்தில் அளப்பரிய ஆர்வம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஐன்ஸ்டீனின் தந்தை வியாபாரத்தில் நொடித்துப் போகவே, குடும்பம் இத்தாலிக்கு குடிபெயர்ந்தது.
இங்கு வந்ததும், வின்டெலர் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி, சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நுண்கல்வி நிலையத்தில் சேர்ந்தார்.
அப்போது சோதனைச் சாவடிகளிலும், நூல்கலை படிப்பதிலுமே பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.
தனது நண்பர் மார்ஷல் என்பவரின் உதவியுடனேயே அனைத்து பாடங்களிலும் கற்றுத் தேர்ந்தார்.
படிப்பு முடிந்து வெளியே வந்ததும், பெர்ன் நகரில் இருந்த அலுவலகம் ஒன்றில் குமாஸ்தா வேலை கிடைத்தது.
ஐன்ஸ்டீனுக்கு இந்த வேலை மிகவும் பிடித்துப் போனது, இதற்கு காரணம் விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபட அதிக நேரம் கிடைத்தது தான்.
தொடர்ந்து 1905ம் ஆண்டுகளில் இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வெளியாகி புகழை தேடித் தந்தன.
இயங்கும் பொருட்களில் மின்னியக்க ஆற்றல்
பிரவுகளின் இயக்கம் பற்றிய விதிமுறை
ஒளியின் தோற்ற மூலங்களும் மாறுபாடுகளும்
அணுத்திரள்களின் பருமனான அளவைகளை நிர்ணயித்தல்
இவரது திறமைகளை கண்ட ஸனரிக் பல்கலைகழகம் தத்துவ பேராசிரியர் என்ற பட்டத்தை கொடுத்தது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை என்ற ஆராய்ச்சி விளக்கமும் வெளிப்பட்டது.
இடம், காலம், பிரபஞ்சம் பற்றிய அவரது ஆராய்ச்சிக் கொள்கைகளே சார்புக் கொள்கை எனப்படும்.
இதுவே உலகையை பயமுறுத்தும் அணுகுண்டு பிறக்க காரணமாக இருந்தது என்று சொல்லலாம்.
இக்கொள்கை வெளியாக பின்னர் உலகமே ஐன்ஸ்டீனை திரும்பி பார்த்தது, ஆராய்ச்சியில் முழுமூச்சாக ஈடுபட தொடங்கினார்.
1921ம் ஆண்டு தனது மனைவியுடன் ஐன்ஸ்டீன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அமெரிக்கா திரண்டு வரவேற்பு அளித்தது.
லண்டனிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது, பல்வேறு சொற்பொழிவுகளையும் ஆற்றினார்.
இந்நிலையில் 1922ம் ஆண்டு “ஒளி மின்விளைவு” என்ற ஆராய்ச்சிக்காக ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் முதல் உலகப் போர் தீவிரமாக நடந்ததால், ஜேர்மனியை விட்டு அமெரிக்காவில் குடியேறினார்.
1941ம் ஆண்டு அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது, பின் சார்பு நிலை கொள்கையை அடிப்படையாக கொண்டு அணு குண்டு தயாரிக்கும் முறையை கண்டறிந்தார்.
அதாவது, அணுவிலிருந்து மிக அதிக அளவில் சக்தியை வெளிப்படுத்த முடியுமென அவர் தெரிந்து கொண்டார்.
E=mc2
E= சக்தி
M= பொருட் திணிவு
C=ஒளியின் வேகம்
இதன் மூலம் அணுகுண்டுகள் தயாராகின, 1945ம் ஆண்டு ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா பகுதிகளில் அணுகுண்டுகள் வீசப்பட்டு மக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
அப்போது தான் கண்டுபிடித்த ஒரு விடயம் மக்களை அழிக்க பயன்படுவதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார்.
எனினும் ஆக்க வேலைகளுக்கும் பயன்படும் என கண்டறிந்த பின்னரே, அவரது மனம் சமாதானம் அடைந்தது.
வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தவர், 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதி காலமானார்.
உயில் மூலமாக தனது மூளையையும், உடலின் சில பகுதிகளையும் ஆய்வுக்காக தானமாக வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக