தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 25, 2014

பொய் சொல்வோரை கண்டுபிடிக்கும் கணனி

தலை வலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் எதிர்பாராத வேளைகளில் ஏற்படும்போது உயிரே போய் விடுவது போல் பலர் துடித்துப் போய் விடுவதுண்டு.
ஆனால், இவ்வாறு போலியாக நடிப்பவர்களை கண்டுபிடிக்கும் புதிய கணனி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஒருவர் நிஜ வலியால் துடிக்கிறாரா? அல்லது போலி வலியால் நடிக்கிறாரா? என்பதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும் நவீன கணனியை அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள சாண்டியாகோ நரம்பியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்காக வலியால் அவதிப்படும் 25 பேரின் ஒரு ஜோடி வீடியோ காட்சிகளை ஆராய்ச்சியாளர்கள் 170 பேரிடம் போட்டுக் காண்பித்தனர். இவற்றில் எது நிஜ வலி? எது போலி வலி? என்று அடையாளப்படுத்தும்படி, அவர்களிடம் கேட்கப்பட்ட போது, சுமார் 50 சதவீத நடிப்பை மட்டுமே இவர்களால் இனம்காண முடிந்தது.
ஆனால், இதே காட்சிகளை கவனித்த இந்த நவீன கணனியோ 85 சதவீதம் துல்லியமான முடிவை வெளியிட்டு மனிதர்களை அசத்தியுள்ளது.
நிஜ வலி ஏற்படும் போது மனிதர்களின் வாய் உள்ளிட்ட முகத்தின் தசைப் பகுதிகளில் உண்டாகும் 20 வகை மாற்றங்களை அடிப்படையாக வைத்து இந்த சரியான முடிவுகளை கணனி கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 [ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 04:52.42 மு.ப GMT ]

No comments:

Post a Comment