தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 மார்ச், 2014

தேயிலையில் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம்!

தேயிலையில் புற்று நோயைக் குணப்படுத்தும் விசேட மருத்துவ குணம் இருப்பதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
தேயிலையில் இருக்கும் கெடேச்சன் என்ற இரசாயனம் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் மருத்துவ குணத்தை கொண்டிருப்பதாக கொழும்பு நாலந்த கல்லூரியில் மாணவரான ரகித்த மலேவன என்ற மாணவர் முதலில் கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து அது குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அதனை ஆய்வு செய்து மாணவரின் கண்டுப்பிடிப்பை உறுதிப்படுத்தியது எனவும் அவர் கூறினார்.
தேயிலையில் இருக்கும் கெட்டச்சன் இரசாயனத்தை பிரித்து எடுத்து அதனை புற்றுநோய் செல்களில் செலுத்தப்பட்ட போது அது அழிந்ததை காணமுடிந்தது.
இதனால் குறித்த இரசாயனத்தை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தை தயாரிக்க முடியும்.
இந்த இரசாயனத்தை கண்டுப் பிடித்த மாணவருக்கு இலங்கையின் சிறந்த ஆய்வுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளதுடன், ஆய்வு பணிகளுக்காக அமெரிக்காவுக்கு செல்ல அவருக்கு புலமைப் பரிசில் கிடைத்துள்ளதாக அனில் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக