தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 மார்ச், 2014

போதிதர்மர் யார்? ~ தமிழரா? ஒரு கண்ணோட்டம்!!!


~~~ போதிதர்மர் யார்? ~ தமிழரா? ஒரு கண்ணோட்டம்.
போதிதர்மர் வாழ்க்கையைப் பற்றி குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன. இவர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. அவர் பாரசீகத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதிதர்மர் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்

பல்லவர்களின் தோற்றம் பற்றிய நம்பத்தகுந்த தகவல்கள் இதுவரை கிடைத்தபாடில்லை. ஒரு சிலர் இவர்களை தமிழர் என்று கூறினாலும் மற்ற சிலர் இவர்கள் தமிழகத்துக்கு வெளியிலிருந்த வந்த தமிழரல்லாத இனத்தவர் என்று கூறுகின்றனர். முற்கால பல்லவர்களின் சாசனங்களின் மொழி அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து இவர்கள் வட பகுதியிலிருந்து வந்த பிராமணக்குடியினர் என்றும் வேறு சிலர் கருதுகின்றனர். பிற்கால அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு இவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

வின்சென்ட் ஸ்மித் என்னும் வரலாற்று ஆசிரியர் தனது , "பழைய இந்திய வரலாறு " என்னும் ஒரு புத்தகத்தின் முன்று பதிப்புகளிலும் பல்லவர்கள் தமிழர்களா? இல்லையா? என்பது குறித்து சில பல பல்டிகளை அடித்துள்ளதாக தெரிகிறது. இவர் வழியில் ரைஸ் என்பவர் சில ஆராய்ச்சிகளுக்கு பிறகு பல்லவர் என்போர் பாரசீகத்தின் (தற்போதைய ஈரான்) பஹ்லவர் மரபின் வழி வந்தவர்கள் என அறிவித்துள்ளார். இலங்கையின் இராசநாயகம் தன் பங்குக்கு, இலங்கை அடுத்த மணிபல்லவம் தீவிலிருந்து வந்தவர்கள் இந்த பல்லவர்கள் என அறிவித்துள்ளார்.

பிராக்ருத மற்றும் வட மொழியில் எழுதப்பெற்ற பல்லவ பட்டயங்களோ, பிற கல்வெட்டுக்களோ அவர்கள் இன்ன மரபினர் என்றோ, இன்ன ஊரினர், இன்ன நாட்டினர் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் சேர, சோழ, பாண்டிய வழி தமிழர்கள் ஆயின், பட்டயங்கள், கல்வெட்டுக்கள், ஆட்சி மொழி என எல்லாவற்றிலும் வட மொழியை வளர்க்க வேண்டியதன் அவசியம் என்ன?

அதுமட்டுமின்றி எட்டாம் நூற்றாண்டு வரை எந்த தமிழ் புலவனையும் பல்லவர்கள் ஆதரித்ததாக தெரியவில்லை.
 —

பின்னூட்டம் 
தமிழனை மூவேந்தரை தவிர்த்து எந்த தமிழன் ஆண்டான்?கலப்பினம்,வேறுமா நிலம் தானே ஆள்கிறது!காரணம் தமிழனுக்கு ஜாதி(பிரிவு) பற்றிய உண்மை தெளியாமையே!!கீழ் ஜாதி என்போர் தீமை,பாவம் தரும் தொழில்களை செய்வோர் மட்டுமே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக