தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 மார்ச், 2014

126 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய முதலை இனம் கண்டுபிடிப்பு!

பூமியில் 126 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய வகை சின்னஞ்சிறு முதலை இனத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வைட் தீவிலேயே இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் இருவேறு பாகங்கள் வெவ்வேறு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலையின் மண்டையோட்டின் பின் அரைப்பகுதி வைட் தீவில் சாள்ட்டவுன் எனும் இடத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் டியனி திரேவர்தன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதன்பின் மூன்று மாதங்கள் கழித்து, ஆஸ்ரின் மற்றும் பின்லி நாதன் என்பவர்களால் மண்டையோட்டின் மற்றொரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கூறுகையில், 126 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதலை இனத்தின் எச்சமாக இருக்கலாம் என்றும், 2 அடி நீளம் மட்டுமே இருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
 [ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2014, 10:24.01 மு.ப GMT ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக