தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 பிப்ரவரி, 2014

தாரம் தவிர்த்து இன்னொரு பெண்ணைத் தாயாய் நினைத்தது இந்த(இந்தியா) நாடுதானா?


தாரம் தவிர்த்து இன்னொரு பெண்ணைத் தாயாய் நினைத்தது இந்த நாடுதானா? என்று கேட்கவைக்கிறது தினம்தினம் ஊடகங்களில் கேட்கும் செய்திகள். 

பெண்கள் மீதான வன்முறைகள் வரம்பின்றி அதிகரித்துக் கொண்டிருக்கும் காலம் இது! பெண்களை அம்பிகையாக காணப் பழக்குவித்த நம் பண்பாடு இன்று கேட்பாரற்றுக் கிடப்பதுதான் இதற்குக் காரணம்!

ஆணாதிக்கம், பெண்ணியம் என்று பேசுபவர்களும் பல இடங்களில் இந்த பண்பாட்டை உதாசீனப்படுத்தி விடுகிறார்கள். ஏன், சில பெண்களே கூட, அம்பிகையின் சொரூபமாக அல்ல,வெறும் சாதாரண பெண்ணாகக் கூட காணமுடியாத அளவுக்கு அவ்வளவு விரசமாக வலம்வருகிறார்கள்.

பண்படுத்துவது தான் பண்பாடு.. அது தமிழ்ப்பண்பாடோ, சைவப் பண்பாடோ, இந்துப்பண்பாடோ, எதுவானாலும், கடைப்பிடிக்கப்படவேண்டியது தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பெண்கள் மாத்திரமன்று, பண்பாட்டை நிலைப்படுத்துவது ஆண்களின் கடமையும் கூட!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக