தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, October 11, 2013

**கல்வளைப் பிள்ளையார் ஆலய வரலாறு.**


இக் கோயில் 1770 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஏரம்ப ஐயர், நாகேந்திர ஐயர், கார்த்திகேசு ஐயர், சுப்பையர் ஆகியோரால் பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. மூலஸ்தானமும் கர்ப்பக்கிருக மண்டபமும் பழைமை வாய்ந்தவை. 
மேலும் 1899 - 1902 வரையான காலப்பகுதியில் சாளம்பைராயரால் கட்டப்பட்ட மணிக்கூட்டு கோபுர வேலைகளும் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டன. 1901 ஆம் ஆண்டு தற்போதுள்ள பாரிய கண்டாமணி அ.கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
1947 ஆம் ஆண்டு 7 பேர் கொண்ட தர்மகர்த்தா சபையிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது.
கல்வளைப் பிள்ளையார் கோவில் இன்று புதுப்பொலிவுடன் கண்ணையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதத்தில் தோற்றமளிக்கிறது. இப் பெரும் தொண்டிற்கு உள்ளூர், வெளியூர், இடம்பெயர்ந்த அடியார்கள் தாராளமாக வழங்கிய பெரும் நிதியும் தர்மகர்த்தா சபையின் அயாரத முயற்சியும் கல்வளை வாழ் இளைஞர்களின் பயன் கருதா அரும்பெரும் தொண்டும் சிறப்பான சேவையும் பேருதவியாக அமைந்தன.
மேலும் 1995 ஆம் ஆண்டு மகா குமைபாபிஷேகப் பெருவிழா பிரம்ம ஸ்ரீ சோ. சந்திரகாந்தக்குருக்கள் தலைமையில் பல வாச்சாரியர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது. நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்ரிய சுவாமிகளும் பேராசிரியர் கலாநிதி கோபாலகிருஷ்ண ஐயரும் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பக்குட்டி ஆகியோர்களால் ஆசியுரை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து 1008 சங்காபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றன.
பக்தர்கள் அனைவரும் கல்வளையான் நல்லருளால் உடலுள பலத்துடன் நீண்ட நல்லாயுளையும் இன்ப வாழ்வையும் பெற்று நீடூழி காலம் வாழ வேண்டுகிறோம்.
*முற்றும்.*

No comments:

Post a Comment