தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

தமிழ்த் திரைப்படம்:ஈழத்தில்..

ஈழத்துத் தமிழ் திரைப்பட வடிவம் சமுதாயத்திலிருந்து ஆரம்பிக்கிறது.இன்றுவரை பல கலிஞர்களை உருவாக்கித் தந்திருக்கிறது.
நடிப்பு,நடனம்,இச்,பாடல்,தொழில்நுட்பம்ங்கள்,ரசிகர்கள் எனத் தொடரான கூட்டம் இருந்துகொண்டே இருந்து வந்திருக்கிறது.
அரசியல்,இனமோதல், இவற்றுக்கப்பாலும் தொடர்ந்தே வந்திருக்கின்றன.கோமாளிகள்,,புதியகாற்று,நான் உங்கள் தோழன்,, வாடைக்காற்று,குத்துவிளக்கு,ஷர்மிளாவின் இதயராகம் போன்ற பல ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் தடங்களைப் பதித்து வந்தே உள்ளன.
காத்திருப்பேன் உனக்காக,அனுராகம்,,புதியகாற்று,,வாடைக்காற்று, போன்றன கதைப்போக்கில் கவனம் செலுத்திய படங்களாகும்.
இதில் வாடைக்காற்று,ஷர்மிளாவின் இதய ராகம்,பொன்மணி என்பன முன்னரே நாவல்களாக வெளி வந்திருந்தன.
நாடகங்களில் அதிகமாகவே பரிச்சயமானவர்களாகவே இருந்தனர்.
அராலியூர்.புவனேந்திரன்,நவாலியூர்.நா.செல்லத்துரை,தர்மலிங்கம்,சித்தி.அமரசிங்கம்,வரணியூரான்,ஆனந்தராணி,கே.ஏ.ஜவாகர்,லத்திப்,ஹெலன்குமாரி,சந்திரகலா,சிலோன்.சின்னையா போன்று பலரைச் சொல்லலாம்.
வி.முத்தககு,கலாவதி,சுஜாதா,எஸ்.கே.பரராசசிங்கம்,குலசீலநாதன் போன்றோரையும் குறிப்பிட வேண்டும்.
வி.பி.கணேசன் போன்றோர் நேரடியாகவே திரைக்கு வந்ததாகவும்,தம் கட்சி கொள்கை பரம்பலைக் கருத்திலும் கொண்டவர் என்பது பலரின் கருத்து எனினும் வசூலில் சாதனையை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் தெரிந்தவராகக் குறிப்பிடலாம்.
இடையே நான்குலட்சம்.சறுங்கலே போன்ற மொழிபெயர்ப்புப் படங்களும் வந்திருந்தன.
இழையில் கண்னன் நேசம்,ரொக்சாமி போன்றொரின் கைவண்ணம் அழகு சேர்த்தன.
பி.கிருஸ்ணகுமாரின் தோட்டக்காரி,மீனவப்பெண் இரண்டும் நல்ல படங்களாக கொள்ளப்படவில்லையெனினும்,திரைப்பட வரலாற்றுப் பதிவினை தக்கவைத்துக் கொண்டன.
நாடகத் துறையில் அதிக நகைச்சுவை நாடகங்களை மேடையேற்றிய வரணியூரான் குழுவினரின் இணைவில் வெளிவந்த செங்கையாழியானின் நாவலாகிய வாடைக்கற்று அதிக நாட்கள் ஓடியது.கையை சுட்டுக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.
வானொலியில் அதிக நாட்கள் ஒலிபரப்பாகிய கோமாளிகள்,ஏமாளிகள் திரைமாற்றத்தில் திருப்தி தரவில்லையெனினும் ஓரளவு திரும்பி பார்க்க வைத்த படங்களாகும்.
மாமியார் வீடு,நங்கூரம்,நீலக்கடலின் ஓரத்திலே,தி,மோகனப்புன்னகை,பைலட் பிரேம்நாத்,ரத்தத்தின் ரத்தமே போன்றன இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் வெளி வந்த படங்கள்.ஜெய்சங்கர்,ஜெயா,காமினி பொன்சேகா,சிவச்சந்திரன்,மாலினி பொன்சேகா,எஸ்.வி.சுப்பையா எனப் பலர் நடித்திருந்தார்கள்.
அநுராகம்,வெண்சங்கு ரொபின் தம்பு அவர்கள் எடுத்த படங்களாகும்.சுன்டிக்குளி சோமசேகரனின் 'நெஞ்சுக்கு நீதி' டாக்ஸ்சி ட்றைவர் குறிப்பிடத்தக்க படங்கள்.ஏ.ரகுநாதன் 'நிர்மலா' என்றொரு படத்தை வெளியிட்டார்.நல்ல படம் என்று சொல்லிக்கொண்டளவிற்கு'அவர் நடித்து லிபர்டி பிலிம்சாரின் 'தெய்வம் தந்த வீடு'வெற்றிபெறவில்லை.
முன்னர் ஒரு கருத்து இருந்தது.திரைப்படக்கூட்டுத்தாபனம் எழுபத்தைந்து வீதம் கடன் கொடுக்கும் என்பதும்,சிங்களத் திரைப்படங்களும் அதிக சலுகை கிடைத்ததாகவும்,தமிழ்ப்படங்கள் முழுவதும் எடுத்துவிட்டு காத்திருக்கும் நிலையில் இருந்ததையும் சொல்வர்.அதுவும் திரைப்படத்துறை தமிழில் வளர்ச்சியடையாத நிலயில் இருந்ததாகச் சொல்வார்கள்.
உண்மையெனில் துன்பம்தான்.
தயாரிப்பில் இருந்து நின்றுபோன படங்களும் உண்டு.
டீன்குமார் வி.பி.கணேசனுடன் இரண்டாவது கதாநாயகனாக நடித்தபின் ஒரு திரைப்படத்திற்கு பூஜை போட்டதாகத் தகவல்.அதே போல யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பவிழாவை பிரமாண்டமான முறையில் கொண்டாடிய மாலுசந்தி.சபாரத்தினத்தின் 'மாதா கோவில் மணியோசை',ம.க.அந்தனீசில் அவர்களின் கல்லானாலும் கணவன் திரைப்படமும் நின்று போனவைகள்
யாழூர்.கே.ஏ.துரையின் கைவண்ணத்தில் ரகுநாதன் இயக்கிய -உறங்காத உள்லங்கள்' சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நின்று பொனவைதான்.
நிதிப் பங்களிப்பு செய்பவரே நடிக்க முனைவது ஒருவகையில் படம் தொல்வியாவதற்குக் காரணம்.
நெஞ்சுக்குத்தெரியும் படத்திற்கு முதலில் இயக்குனர்.சந்திரன் இயக்குவதாக இருந்ததும்,பின்னர் லெனின் மொறாயஸ் இயக்கியதும் இது போன்ற நடவடிக்கையே.புதியகாற்ரு ஒரு சுவாசத்தை தந்த திரைப்படம்.தெளிவத்தை.ஜோசேப்பின் கதை வசனத்தில் உருவானதும்,பண்பட்ட நடிகர்களான சின்னையா.தனரத்தினம் போன்றோர் நடித்ததும் சிறப்பாயிருந்ததும்,புதுமுகமான கணேஷ் கதாநாயக தோற்றத்திற்கு எடுபடவில்லை.எனினும் இப்படிப் படம் எடுத்தால் கையைச் சுட்டுக்கொள்ளாது எனப் பலருக்குப் புரியவைத்தது.
மேலும்,
நெஞ்சுக்குத் தெரியும்,இளைய நிலா என்ற திரைப்படங்கள் எடுத்து முடிவுற்ற நிலையில் 83இன் கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டது.'நெஞ்சுக்குத் தெரியும்' சினிமாஸ்கோப் திரைப்படம்.நல்லூர்.மனோகரன்,ஹெலன்குமாரி,சந்திரகலா போன்ற பலர் நடித்திருந்தனர்.லெனின் மொறாயஸ் இயக்கியிருந்தார்.இசை,பத்திர வர்ப்புக்கள்,நடிப்பு,ஒலிக்கோர்ப்பு,சண்டைக்காட்சி,-போட்டி நடனம் என சிறப்பான படம் வெளிவராமலேயே போனது துர்ப்பாகியமே.சுக்ரன் லிமிட்டெட் என்கிற நிறுவனம் மூலம் தயாரிக்கபட்டிருந்தது.இளைய நிலா ஷண் என்பரால் எடுகப்பட்ட படம்.அந் நாட்களில் கெ.எஸ்.ராஜாவின் குரலில் வானொலியில் தொடர் விளம்பரமும் போடப்பட்டது.ராஜகுருசேனாதிபதிகனகரத்தினம் அவர்களின் பாடலுக்கு கலாவதி,முத்தழகு,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,எஸ்.பி.ஷைலஜா போன்றோர் பாடிய பாடல்கள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
பலரின் கனவுகள்,பயிற்சிகள் ,திறமைகள் கைகொடுக்கையில் நல்லதொரு திரைப்படம் உருவாகும்.சிங்களப்படங்களில் கடமையாற்றியோரில் பலர் தமிழர்களே.எஸ்.பி.சாமி தயாரித்த 'ஆதரே மங்க் ஆத்ரே' தயாரித்த படமாகும்.ஜெம் புரொடக்சன் மூலம் மூன்று வெற்றிப்படங்களைத் தந்திருந்தார்.தமிழில் அவரால் கைவைக்க முடியாது போனது நமது துர்ப்பாக்கியமே.றொபின் தம்புவும் அப்படியே.இசையிலும் பிரகாசித்தார்கள்.
நம்மிடையே நிறைய திறமைசாலிகள் உண்டு.அவர்களை எந்தவொரு அரசியல் விகல்பமின்றி இணைப்பதன் மூலம் எனியாவது திரைப்படமொன்றைத் தரவேன்டும்.தொடர்ந்த பட உற்பத்திகளின் பின் எது நல்ல படம் என்பதை காலம் தீர்மானித்து நிற்கும்.
-இந்திய திரைப்பட மோகமும் எங்களை நல்ல படங்களை எடுப்பதைத் தடுக்கிறது என்று சொல்வோரும் உண்டு.தமிழராய் இருப்பதால் வெற்றிகொள்ளக் கஸ்டம் என்கிறவர்களும் இல்லாமல் இல்லை.ஆனால் மாற்றமுடியும் என்பதை சிந்திக்க மறுக்கிற கூட்டத்துள்ளிருந்து நாம் வெளியேறவேண்டும்.
வன்னி உடபட பல இடங்களில் குறும்படங்களின் முயற்சிகள் வருகின்றன. போட்டிகளிலும் பரிசு பெறுகிறார்கள்.நவீன தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக பலர் வந்திருக்கின்றனர்.
எனவே சாத்தியப்படும்.
வெற்றிக்கனியை ஈழத்துத்தமிழ் திரைப்படங்கள் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
முல்லைஅமுதன்
31/10/2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக