தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 அக்டோபர், 2013

நட்சத்திர பலன்கள்!!!!


நட்சத்திரங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணம், வலிமை, பெருமை இருக்கிறது. ஆனால் ஒரு ஜாதகரின் செல்வச் சிறப்பு, குண நலன்கள் ஆகியவற்றை நட்சத்திரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்துவிடக்கூடாது.
ஜாதகரின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நட்சத்திரம், லக்னம் மற்ற கிரகங்களின் தன்மைகள் முதலியவற்றை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். நட்சத்திரங்களின் வலிமை, சிறப்பு முதலியவை பொதுவானதே தவிர தனிப்பட்டது அல்ல.....

1. அசுவினியில்; பிறந்தவர் கடுமையாக உழைக்கக்
கூடியவர். எடுத்துக்கொண்ட வேலையைச்
செய்து முடிக்கும் திறமை உடையவர்.

2. பரணி: பெற்றோருக்கு அடங்கி நடப்பார்.
புகழுடன் விளங்குவார்.

3. கிருத்திகை: திறமையான பேச்சாளர். அதிக
முயற்சியின்றியே ஒரு காரியத்தைச்
செய்து முடிப்பார்.

4. ரோகினி : தயாள குணம் படைத்தவர்.
மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்.

5. மிருகசீரிஷம்: புத்தி சமர்த்தியமுள்ளவர்.
சுறுசுறுப்பாக எதையும் செய்வார்.

6. திருவாதிரை: பெருந்தன்மையானவர். பணத்தைப்
பணம் என்று நினைக்காதவர் .

7. புனர்பூசம்: துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்.
விரோதியிடம் கூட அன்பு காட்டுவார்.

8. பூசம்: வாதத் திறமை மிக்கவர். அவர் தொழிலும்
வாய் மூலம் பொருளீட்டுவதாகவே இருக்கும்.

9. ஆயில்யம்; எதிரியைக் கண்டு பயப்படமாட்டார்.
பதவிக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருப்பார்.

10. மகம்; அடிக்கடி பயணத்தில் பிரியமாக
இருப்பார். வீட்டில் விட வெளியிலேயே இவர்
மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்குவார்.

11. பூரம்; கவிதைகள் புனைவதில் வல்லவர்.
கற்பனை உலகில் உலாவுபவர்.

12. உத்திரம்: சிற்றின்பத்தில் அதிக
ஈடுபாடு உள்ளவர். ஆடம்பரப் பிரியர்.

13. அத்தம்: பெரியோர்கள், ஆசிரியர் ஆகியோரிடம்
பயபக்தியுடன் இருப்பார்.

14. சித்திரை; முன்கோபி. அவரை அடைந்தவரைக்
காப்பாற்றத் தயங்காதவர். சொன்ன சொல் தவறாதவர்.

15. சுவாதி; சந்தர்ப்பம் கிடைத்தால்
வீட்டையே சூறையாடி விடுவார். சாப்பாட்டில் அதிக
நாட்டமுடையவர்.

16. விசாகம்: நேர்மையாளர். நீதிக்குத்
தலை வணங்குவார். நீதிபதியாகவும் பதவி வகிக்கத்
தகுந்தவர்.

17. அனுஷம்; புகழுக்காக அரும்பாடு படுவார்.
இவர் செல்வத்தைத் தேடி அலையமாட்டார். இவரைத்
தேடி பொன்னும் மணியும் வந்து சேரும்.

18. கேட்டை: ஏற்றமும் இறக்கமும் இவர் வாழ்க்கையில்
மிகச் சாதாரணமாக இருக்கும். துன்பம்
வந்து பொது இடிந்துபோய் உட்கார்ந்து விடுவார்.

19. மூலம்: அரசாளப் பிறந்தவர்கள். ஆனால்
ஆண்டியாகவும் இருப்பார்.

20. பூராடம்:
சிறுவயதிலேயே துணையை இழந்து அல்லல்படுவார்.
காதல் மணமானால் நீண்டகாலம் மகிழ்ச்சியுடன்
இருப்பார்.

21. உத்திராடம்: உற்றார்
உறவினருக்கு உதவிபுரிபவர். தன ஸ்நலனைவிடப்
பிறர் மகிழ்ச்சியையே பெரிதாக நினைப்பார்.

22. திருவோணம்: மகிழ்ச்சியுடன் இருப்பார். மனம்
தளரமாட்டார். சொத்து சுகம் இழந்தாலும்
நேர்மை தவறமாட்டார்.

23. அவிட்டம்: இலட்சியத்திற்காக உயிரையும்
தியாகம் செய்யத் தயங்காதவர் மானத்தை உயிரினும்
மேலாக நினைப்பார்.

24. சதயம்: பொய் பேசாதவர். உயிர்ருக்கு அஞ்சி,
தகாத வழியில் போகமாட்டார்.

25. பூரட்டாதி: முன்னுக்குப்பின் முரணாக நடக்கக்
கூடியவர். சிறு தவறையும் பொறுக்க மாட்டார்.

26. உத்திரட்டாதி: கல்வி கேள்விகளில்
சிறந்து விளங்குவார். விரோதிகளையும்
நண்பர்களாக்கும் சிறந்த பண்பாளர்.

27. ரேவதி: சொந்த புத்தியை விட்டு பிறர்
சொல்படி நடப்பார். துணிந்து எதையும் செய்ய
மாட்டார்.



---------------------------
www.facebook.com/pages/%E0%/170919472983176

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக