தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதிச்சாம்!!


மதம் ஆன்மிகம் என்ற பெயரில் தமிழக வளத்தை அழிக்கும் ஈசா யோகா மையம் ! 

மேற்கு தொடர்ச்சி மலை , வெள்ளியங்கிரி கோவை பகுதியில் அமைத்துள்ளது ஈசா யோகா மையம். இதை நடத்துபவர் ஜக்கி வாசுதேவ் என்ற தெலுங்கர். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். எல்லா சாமியார்களை போலவே இவரும் தான் யோக சமாதி அனுபவத்தை பெற்றவர் என்று கூறிக் கொண்டு எளிய மக்களை தன் பக்கம் ஈர்ப்பவர். இவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். அதனால் ஆங்கிலம் சரளமாக பேசுவார். இவரது ஆங்கில உரைக்கு மயங்குகின்றனர் பல வெளிநாட்டு உள்நாட்டு ஆன்மிகம் தேடும் மக்கள் .

இதன் காரணமாக இவருக்கு சீடர்கள் நாளுக்கு நாள் அதிகமாயினர். வழக்கம் போல் இவர் வேதங்களை குறித்தும் , ஆரிய இந்து சமயம் குறித்தும் சொற்பொழிவு ஆற்றுவார். (பின்பு என்ன திருக்குறள் , நாலடியார், ஆத்திச்சூடி வகுப்பா நடத்துவார் ?) ஆரிய இந்து சமயத்தை போற்றுபவர்கள் இவருக்கு கோடி கோடியாக நிதி வழங்கினர். ஆன்மீக யோகத்தை கற்றுக் கொடுக்கும் சாமியார்கள் இவ்வளவு பணம் கிடைத்தால் சும்மா இருப்பார்களா என்ன ? உடனே வியாபாரத்தை தொடங்குவார்கள் தானே! அதே போல் தனது ஆன்மீக வியாபாரத்தை கோவையில் உள்ள வனப்பகுதியில் முதலீடு செய்து தொடங்கினார். சிறிதாக வன இடத்தை வளைத்துப் போட்டு ஆசிரமத்தை கட்டி எழுப்பினார். வியாபாரம் சிறுது சிறிதாக சூடு பிடிக்கவே , இன்னும் நிலத்தை கையகப் படுத்தினார். காடுகள் அழிக்கப்பட்டது. ஆசிரமம் பெரிதாகியது. பல வானுயர கட்டிடங்கள் எழும்பியது . மென்மேலும் அருகாமையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வளங்கள் அழிக்கப்பட்டது. ஆசிரமத்தில் , தியான கூடம், நீச்சல் குளம் , செயற்கை குளம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு கூடம் , அனுமதி பெறாத பள்ளிக் கூடம் , ஆரிய மத கல்வி நிலையம் என பல கட்டிடங்கள் உருவாகியது . இந்த கட்டிடங்களின் மொத்த பரப்பளவு மட்டும் நான்கு லட்சம் சதுர அடி . அது தவிர சுற்றி வளைக்கப்பட்ட திறந்த வெளி இடங்கள் .

இந்த கட்டிடங்கள் அனைத்தும் வனத்துறை மற்றும் அரசின் அனுமதி பெறாமல் கட்டி முடிக்கப்பட்ட இடங்களாகும். பல லட்சம் மரங்கள் அழிக்கப்பட்டு , இயற்கை நீரூற்றுகள் அடைக்கப்பட்டு இங்கு கட்டிடங்கள் எழும்பி உள்ளது. யானைகள் கடந்து செல்லும் பாதை முற்றிலும் தடுக்கப்பட்டது . யானைகள் குடிப்பதற்கும் , நீராடுவதற்கும் நீரின்றி தவிக்க விடப்பட்டது. இந்த வனங்களை நம்பி வாழும் பல உயிரனங்கள் , பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வை இழக்கும் நிலை நேரிட்டது. யானைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையம் வந்து விட்டது. இதனால் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து மக்களை துன்பப் படுத்தும் நிலையும் வந்து விட்டது.

ஆன்மீக பக்கதர்களுக்கு சேவை என்ற பெயரில் பெரும் வியாபார நிறுவனமாக வளர்ந்து விட்டது இந்த ஈசா யோகா மையம். பல லட்சம் வெளிநாட்டு வெளிமாநில மக்கள் இங்கு வருவதால் , இங்குள்ள காடுறை விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தும் வருகிறது. அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் இடிக்க வேண்டும் என அரசு இப்போது உத்தரவு போட்ட போதிலும் , ஈசா யோகா மையம் தனது பண பலம் அதிகார பலம் கொண்டு அதை தடுத்து நிறுத்தி விட்டனர். ஆன்மிகம் என்ற பெயரில் இங்கு பண்பாட்டு சீரழிவும் நடக்கிறது . ஆடல் பாடல் நடன நிகழ்சிகள் என்று அனைத்தும் ஆசிரமத்திற்குள் நடக்கிறது. இத்தகைய ஆசிரமங்கள் இயற்கையை அழித்து மனிதரை மயக்கி பெரும் வியாபார நிறுவனமாக வளர்ந்துள்ளது தமிழகத்திற்கு எல்லா வகையிலும் தீமையே ஆகும். இதை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் மக்களுக்கும் இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த காணொளியை பாருங்கள் .
http://www.youtube.com/watch?v=VvDEB85omIY


தூய தமிழ்ச்சொற்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக