தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, September 27, 2013

விண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்...!


வாங்கிய புதிதில் விண்டோஸ் சிஸ்டம் வேகமாக இயங்கும். அதுவே நாளாக நாளாக அதனுடைய வேகம் குறையும். 

இந்த பிரச்னை விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்கள் அனைவருமே எதிர்கொள்வதுதான். 

விண்டோஸ் வேகமாக புதிய கணினி போல் இயங்க என்ன செய்ய வேண்டும்?

விண்டோஸ் கம்பயூட்டர் வேகம் குறைய என்ன காரணம்? 

1. தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது
2. அடிக்கடி பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்திருப்பது.
3. இந்த ஸ்டார்ட் அப் பைல்களை கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது அதுவும் பின்னணியில் இயங்க ஆரம்பிக்கும் என்ற விஷயம் தெரியாமல் இருப்பது.
4. இப்படி எத்தனையோ புரோகிராம்கள் உங்களுக்குத் தெரியாமலே பின்னணியில் இயங்கிக்கொண்டு இருக்கதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது.
5. இன்டர்நெட்டில் பயன்படுத்தும் புரோகிராம்கள் அனைத்தையும் இன்டால் செய்து செய்து சோதித்துப் பார்ப்பது.
6. சோதனை செய்த சாப்ட்வேர்களை அப்படியே நீக்காமல் விட்டுவிடுவது 
7. விண்டோஸ் அப்டேட் செய்யாமல் இருப்பது.
8. டேட்டா கரப்ஷன், ஹார்ட் டிஸ்க் பிராக்மெண்டேஷன்
9. ஹார்ட் டிஸ்கில் போதுமான இடமில்லாமல் இருப்பது

இதைத் தடுப்பது எப்படி? இதற்கானதீர்வுதான் என்ன?

இதோ தீர்வு!

1. விண்டோஸ் விஸ்டா யூசர் என்றால் அதில் உள்ள யூசர் கண்ட்ரோல் என்ற புரோகிராம் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். அதை நிறுத்தலாம்.
2. அடிக்கடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் cookies, temporary file களை நீக்க வேண்டும். ஒவ்வொரு இணையதளமும் உங்களுடைய ஹார்ட் டிஸ்கில் தற்காலிக கோப்புகளை உருவாக்கி வைத்திருக்கும். அதை நீக்குங்கள். 
3. விண்டோஸ் இயக்கும் தொடங்குவதற்கான நேரத்தைக் குறைக்க அதனுடைய லோகோ தோன்றுவதை கூட நிறுத்திவிடலாம். 
4. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நீங்களே சிஸ்டம் பேக்கப் செய்பவர் என்றால் System Restore Point வசதியை முடக்கி வைக்கலாம். 
5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை வேறொரு டிரைவிற்கு மாற்றி வைக்கலாம்.
6. கம்ப்யூட்டரில் பயன்படுத்தாமல் இருக்கும் fort களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.
7. பிரவுசிங் செய்யும்போது வெப் ஆக்சிலேட்டர்களை பயன்படுத்தலாம். இவைகள் நீங்கள் பார்க்கவிருக்கும் தளங்களை எடுத்து Cache Memoryயில் வைத்து உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும்.
8. கம்ப்யூட்டர் வாங்கி அதிக நாட்கள் ஆகிவிட்டதென்றால் அதிலுள்ள வேகமாக இயங்கும் பாகங்கள் சோதனை செய்து மாற்றி அமைக்கலாம். 
9. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்பி இயங்குதள கம்ப்யூட்டிரில் காப்பி செய்வதற்கு Tera Copy என்ற அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இதனால் சிஸ்டம் வேகமாக இயங்கும்.
10. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் 512 எம்பிக்கு குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
11. விண்டோஸ் விஸ்டாவில் 8 ஜிபியில் 4 ஜிக்கு குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுடைய விண்டோஸ் கம்ப்யூட்டர் முன்பை விட வேகமாக இயங்கும். 

நன்றி. 

The causes of your computer being slow can include:- 

  • Not enough hard drive space, too many unused programs
  • Left over programs, old cached and temporary files
  • Too many programs running at startup or in the background
  • Data Corruption, hard disk fragmentation
  • Missing Windows updates or outdated drivers

விண்டோஸ், windows system speed up, computer speed up, tips for windows computer speed up, how to make computer run fast

No comments:

Post a Comment