தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஆசாரியராதற்கு யோக்கியரல்லாதவர் யாவர்?


சைவ வினாவிடை - ஆறுமுக நாவலர்

சைவபேதவியல்

132. ஆசாரியராதற்கு யோக்கியரல்லாதவர் யாவர்?

நான்கு வருணத்துக்குட்படாதவன், கணவன் இருக்கக் கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், விபச்சாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், முடவன், சொத்திக் கையன், உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், தீரா வியாதியாளன், பதினாறு வயசுக்கு உட்பட்டவன் எழுபது வயசுக்கு மேற்பட்டவன், கொலை களவு முதலிய தீயொழுக்க முடையவன், சைவாகமவுணர்ச்சியில்லாதவன் முதலானவர். (சொத்தி = ஊனம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக