தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, August 26, 2013

ஆன்மீகத்தை எம் முன்னோர்கள் பாதையில் நெறிப்படுத்த வேண்டும் ,,,,,,,


ஆன்மிகம் ஆரோக்கியமான மனித வாழ்வுக்கு சிறந்தது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை .விரதங்கள் ,தியானம் ,அங்கபிரதட்சணம் ,என்பனவற்றின் மூலம் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்து இருக்கலாம் ,,,,,,,,இன்றைய நிலையில் புகுத்த பட்டு இருக்கும் மூட நம்பிக்கைகளை துடைத்து எறிந்து ஆன்மீகத்தை எம் முன்னோர்கள் பாதையில் நெறிப்படுத்த வேண்டும் ,,,,,,,

பூர்வீக காலத்தில் மனிதர்கள் தங்களை நோய் நொடிகளில் இருந்து பாதுகாக்க தேவையான அளவு பிரபஞ்ச சக்தியை உடலில் பெற்றுகொள்ள நீண்ட நாட்கள் தியானம் செய்தார்கள் இதனை தான் நம் புராணங்களில் தவம் செய்தார்கள் என்று சொல்கின்றது .,,,,,,,,,,,

அவ்வாறு தவ வலிமை பெற்று மனிதர்களின் ஐம் புலன்களையும் / தனது புலன்களால் நன்கு அறிந்து மக்களுக்கு ஏற்படும் தோற்று நோய்களில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு வைத்தியம் செய்தவர்தான் ,,புலஸ்தியர் ,,,,,இவர் இராவணன் மூதாதை,,,,

சிவன் முருகன் போன்றோர் உபதேசத்தாலும் அவர்களிடம் இருந்து பெற்ற கல்வி அறிவாலும் மனிதர்களிடம் அவர்கள் உடலில் உணரும் நோய்களின் தாக்கங்களை கேட்டறிந்து அதற்கு ஏற்ப வைத்தியம் செய்தவர் அகத்தியர் ,,,,,,சீனதேசத்தில் இருந்து வந்து பதினெண்சித்தர்களில் ஒருவராய் இருந்தவர் இவரா அல்லது இவர் பெயரை அந்த சீனன் பயன்படுதினாரா ,,என்பது இன்னும் ஆராச்சிக்கு உரிய விடயம்

விலங்குகள் கொடிய விஷ பாம்புகள் மூலம் ஏற்படும் துன்பங்களால் துன்பப்படும் மக்களை தனது நுகர்வு சத்தியால் எந்த விலங்கு தீண்டியது என்பதை கண்டு பிடித்து அதற்கு ஏற்ப செடி கொடிகளால் தயாரிக்கபட்ட மருந்துகளை பூசி அவர்களை காப்பாற்றியவர் மரீசி ,,,,,,,,,,இவர் காசிபன் தந்தை ,,ஆதிசேடன் மூதாதை ,,,,,

இவர்கள் தியானத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியை பெற்று நீண்ட காலம் வாழ்ந்ததாக வரலாறுகள் சொல்கின்றது ,,,இவர்களே ஆன்மீக நெறிகளை மக்கள் மத்தியில் உருவாக்கி வளர்த்தார்கள் ,,,,,இவர்களே பெரும் கடல் பிரளய அழிவின் பின்னர் வம்சங்களை விருத்தி செய்து பரவலாக வாழ வைத்து நெறிபடுத்தினார்கள் ,,,,,,இவர்கள் கடல் அழிவினால் பெரும் தொகை மக்கள் அழிந்ததால் வம்சத்தை வளர்க பல தார திருமணங்களை செய்து பல பிள்ளைகளை பெற்று அவர்களை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றினார்கள் ,,மனிதனை வாழ்வாங்கு வாழ வைக்க ஆன்மீக நெறியை கடைபிடிக்க செய்தார்கள் ,,,
,,,,,,நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்ப வைத்தியம் செய்பவர் வைத்தியர் ,,,,புலன்களை நுகர்ந்து அறிந்து வைத்தியம் செய்தவர் புலஸ்தியர் ,,,,அகத்தில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கேற்ப வைத்தியம் செய்தவர் அகத்தியர் ,,,,,,விலங்குகள் விஷ பாம்புகளிடம் இருந்து மக்களை காப்பாற்றியவர் ,,மரீசி 


சிவ்மேனகை ,

No comments:

Post a Comment