தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, August 26, 2013

எந்தெந்தக் கடவுளுக்கு என்னென்ன பூக்களால் பூசை செய்யக் கூடாது என ஆறுமுக நாவலர் !!

போர்த்துக்கேயர் ஒல்லாந்தர்கள் இலங்கையை ஆண்ட காலப்பகுதியில் ஈழத்தில் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு சைவ சமயத்தவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். இந் நிலையில் சைவ சமயத்திற்கு மறுமலர்ச்சி கொடுத்து சைவ சமயத்திற்கு வரைவிலக்கணம் வழங்கிய பெருமை ஆறுமுக நாவலர் பெருமானையே நாடும். தன்னுடைய சைவ வினாவிடை நூலினூடாக சைவமக்களுக்கு சைவ சமயத்தின் கோட்பாடுகளை அவர் விளக்கியுள்ளார்.

எந்தெந்தக் கடவுளுக்கு என்னென்ன பூக்களால் பூசை செய்யக் கூடாது என அவர் கீழுள்ள வினாவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.


289. இன்ன இன்ன தேவருக்கு இன்ன இன்ன பத்திர புஷ்பம் ஆகா என்னும் நியமம் உண்டோ?
ஆம். விநாயகருக்குத் துளசியும், சிவபெருமானுக்குத் தாழம்பூவும், உமாதேவியாருக்கு அறுகும் நெல்லியும், வைரவருக்கு நந்தியாவர்த்தமும், சூரியனுக்கு வில்வமும், விஷ்ணுவுக்கு அக்ஷதையும், பிரம்மாவுக்குத் தும்பையும் ஆகாவாம்.


விநாயகப் பெருமானுக்கு துளசி இலை மூலம் பூசை செய்வதோ அல்லது துளசி மாலை அணிவிப்பதோ ஏற்புடையது அல்ல என்பதனை மேலுள்ள வினா மூலம் கூறியுள்ளார்.


ஆனால் அண்மையில் நடைபெற்ற செல்வச் சந்நிதி முருகன் கோவில் தேர்த்திருவிழாவின் போது விநாயகருக்கு துளசி மாலை சாத்தப்பட்டிருந்தை இந்தப் புகைப்படம் எடுத்துக் காட்டுகின்றது.

இவ்வாறான பிழையான வழிபாட்டு முறைகள் பல ஆலயங்களில் நடைபெறுகின்றன. பணத்தினை மட்டுமே குறியாகக் கொண்டு செயற்படும் ஆலய அறங்காவலர்களும் அந்தணர்களும் பணத்திற்க்காக வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்து மக்களையும் தவறாக வழிநடத்துகின்றனர். இத்தகைய செயற்பாடுகளை இவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment