தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஆகஸ்ட், 2013

அன்னை தெரேசா கூறிய பெரும் வெற்றிக்கான 8 சூத்திரங்கள்..!


1) எளிய கனவுகள் போதும் அவற்றை அழுத்தமாகச் சொல்லிப் பழகுங்கள்..

உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ
மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும்.

ஆரம்பத்தில் மிக எளிமையான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் அவற்றை அடைந்தபின் அடுத்த செட் கனவுகளைக் காணலாம். என்ன அவசரம்?

2) ஆனந்தமாக வாழ்வதற்குதான் எல்லோருக்கும் விருப்பம், ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் சில
சங்கடங்களை சந்திக்கவேண்டியிருக்கும்.

நீங்கள் ஒரு நல்ல லட்சியத்தை நோக்கிச் செல்லும்
வழியில் பல அசௌகர்யங்கள், சங்கடங்கள், தடைகள்
எதிர்ப்படலாம். அவை உங்களுகடைய பயணத்தையே
கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,

எல்லோரையும் அரவனைத்து அனுசரித்துச் செல்லுங்கள்

3) பொறுமை அவசியம் :

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு.. ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது.

பொறுத்திருங்கள் சூழ்நிலை எப்படிபட்டது என்று கவனமாக யோசித்து உங்களுடைய நேரத்தையும் செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்..

4)சந்தேகப்படுங்கள்:

சந்தேகம் என்றால் அடுத்தவர்கள் அல்ல உங்களை நீங்களே!,

அன்னை தெரசா தன்னுடைய எண்ணங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

அதேசமயம் அவரிடம் அசட்டு நம்பிக்கையை கிடையாது.எதிலும் இறங்குவதற்கு முன்னால் தன்னைத்தானே சந்தேகக் குணத்துடன் கேள்விகளை கேட்டுக்கொள்வார்.

பலவிதமான பரீட்சையில் ஜெயித்து பிறகுதான் முதல் காலடியே எடுத்துவைப்பார்.அதன் பிறகு வெற்றி நிச்சயம்!

5) தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம் :

எந்த வேலையும் செய்வதற்கு இரண்டு வழிகள் உண்டு. நம் இஷ்டப்படி செய்யலாம். அல்லது , இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நமக்கு என்று நமக்கு நாமே வரையறுத்துக்கொண்டு அந்த வரம்புக்குள் ஒழுக்கமாகச் செயல்படலாம்.

அன்னை தெரசா இதில் இரண்டாம் வகை..

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கலாம். என்ன சாப்பிடலாம், எத்தனை மணிக்கு என்ன வேலை செய்யலாம், என்பதில் தொடங்கி சகலத்திலும் தனக்குத்தானேகட்டுப்பாடுகளைவிதித்துக்கொண்டு அவற்றை விடாமல் பின்பற்றியவர் அவர் முணு முணுத்துக்கொண்டு அல்ல..ஒழுங்குமுறையோடு வாழ்வதில்தான் என்னுடை சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லியபடி, சிரித்துக்கொண்டே!

6) எல்லோருக்கும் புரியும் மொழியில் பேசுங்கள்:

அறிவுஜீவிகள் பலர் அடுத்தவர்களுக்கு புரியாதபடி சிக்கலாகப் பேசினால்தான்பெருமை என்று நினைக்கிறார்கள்,உண்மை அதுவல்ல

7) மௌனம் பழகுங்கள்:

பல நேரங்களில், மொழிகள் கூட அநாவிசயம்.ஒரு சின்னப் புன்னகை, அன்பான முதுகுதட்டல்,பாசம் பொங்கும் ஒரு முத்தம் ,என இடத்துக்கு ஏற்ப உங்களது உடல் மொழியால் மௌனமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள், உடனடிப் பலன்கள் கிடைக்கும்.

8 ) யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்:

பொதுவாக நாம் ஒருவரை சந்தோஷப்படுத்த நினைத்தால் இன்னொருவரை அலட்சியப்படுத்தும்படி நேர்ந்துவிடுகிறது.

இந்த பிரச்னைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி.

நமது செயல்பாடுகள் யாரிடம் என்னவிதமான தாக்கங்கள் உருவாக்கக்கூடும் என்று பல கோணங்களில் இருந்து யோசிப்பதான்.

இதற்காகச் செலவிடும் சில நிமிடங்களை வீண் என்று நினைக்காதீர்கள், அவைதான் உங்களைப் பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக