தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 ஜூலை, 2013

தாவரங்கள் தமக்கிடையே கணக்குகளை வைத்திருப்பதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

தாவரங்கள் தமக்கிடையே கணக்கு பார்க்கும் தன்மை கொண்டுள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த ஆலன்ஸ்மித் தலைமையிலான தாவரவியல் விஞ்ஞானிகள் தாவரங்கள் தொடர்பாகBig_tree புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் ஒவ்வொரு தாவரமும் தினமும் பல்வேறு வகை கணக்குகளை போட்டு உயிர் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.
பகல் நேரத்தில் கிடைக்கும் சூரிய ஒளியை கொண்டு அவை தனக்கு தேவையான மாவுச்சத்து பொருட்களை தயாரிக்கின்றன. அன்றைய இரவு தேவைக்கு எவ்வளவு மாவுச்சத்து தேவைப்படும் என்று கணக்கு போட்டு அதற்கு தேவையானதை மட்டுமே அவை மாவுகளை தயாரிக்கின்றன.
மேலும் பகல் நேரத்தில் எவ்வளவு சூரிய ஒளி கிடைக்கும் இதன் மூலம் எவ்வளவு மாவு பொருள் உற்பத்தி செய்யலாம் என்பதையும் துல்லியமாக கணக்கு போட்டு வைத்துள்ளன.
இதுமட்டுமல்லாமல் சேமிக்கப்பட்ட மாவு பொருட்களை தாவரத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதையும் துல்லியமாக கணக்கிட்டு செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக