தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 ஜூன், 2013

தமிழ்நாட்டிலேயே முதியோர் மீதான வன்முறை அதிகம் நடக்கும் மாவட்டம்


தமிழ்நாட்டிலேயே முதியோர் மீதான வன்முறை அதிகம் நடக்கும் மாவட்டம், மதுரைதானாம். மதுரை காரர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். இன்று இதுகுறித்து இன்று ஒரு தொலைக்காட்சியில் நேரடி விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். திருச்சியின் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த செய்தியாளர், பேசுவதற்கு ஏதும் இல்லாமல், தேமே என்று பார்த்துக் கொண்டிருந்த பாட்டியைப் பார்த்து, பேசுங்க, நீங்க எப்படி இந்த இடத்துக்கு வந்தீங்க என்று அதட்டிக் கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால், ஏய் கெழவி இப்ப சொல்றியா, இல்லையா என நாலு அடியும் வைத்திருப்பார் போல. 

தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொள்ள, பசியால் சுருண்டுக் கிடந்த ஒரு குழந்தையை கழுகு ஒன்று வேட்டையாட காத்திருந்ததை புகைப்படமாக்கி வெற்றி பெற்றவரும் கலைஞர்தான். ஒரு சிறுமியின் நிர்வாணத்தை வைத்தே, வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்த புகைப்படக்காரரும் கலைஞர்தான். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? 

செய்தி வாசிப்பாளர்கள், நடிகர்கள் போல் மாறிவிடுகிறார்கள். ஒரு நடிகை, பிச்சைக்கார வேஷம் போட்டு, கோடிக் கணக்கில் சம்பாதித்துவிட்டு, காரில் செல்லும்போது, வழியில் தென்படும் பிச்சைக் காரர்களை ச்சி. தள்ளிப் போ என்று சொல்வதற்கு ஈடாகவே இருக்கிறது, செய்தி வாசிப்பவர்களின் மனநிலையும். செய்தி வாசித்துவிட்டு அடுத்த கணமே தங்களை இயல்பு நிலைக்கு, அல்லது சராசரி மனித தரத்திற்கு இறக்கி கொள்கிறார்கள். ஊடங்கங்களில் வேலை செய்யும் நண்பர்கள் அந்தந்த சூழலுக்கு தங்களை மாற்றிக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், குறைந்தபட்சம் இந்த மாதிரி இடங்களிலாவது கொஞ்சம் தங்களின் மனித நேயத்தை புதுப்பித்துக் கொள்ளலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக