தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, June 19, 2013

கரம் கூப்பிய கைகள் இன்று கமராதூக்கிய கைகளாக மாறிவிட்டது ,,,,,,,,மலர் தூவும் கைகளும் நாளை மாறுமா ,,,,,,,


கரம் கூப்பிய கைகள் இன்று கமராதூக்கிய கைகளாக மாறிவிட்டது ,,,,,,,,மலர் தூவும் கைகளும் நாளை மாறுமா ,,,,,,,

நிலம், நீர் ,காற்று , நெருப்பு, ஆகாயம் ,இவை அனைத்தும் இணைந்த பிரபஞ்ச சக்தி ஒன்றாக ஊடுருவும் இடத்தில் ஆன்மாக்கள் தியான நிலையில் கரம் கூப்பி மனதை ஒருநிலை படுத்தி வழிபட்டு பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி உடல் உள நோய்களை தீர்த்து மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதற்காகவே ஆலயங்களை எமது முன்னோர்கள் உருவாக்கினார்கள்.
இதற்காகவே நதிமூலம் ரிஷி மூலம் என எம் முன்னோர்கள் பார்த்து ஞானிகள் முனிவர்கள் பெருந்தகைகள் தவம் செய்த கடல் கரைகளிலும் ,நதிக்கரைகளிலும் ,மலை அடிவாரங்களிலும், மரங்கள் தோப்புக்கள் நிறைந்த சோலைகளிலும் ஆலயங்கள் அமைத்தார்கள் .
கதிரவன் அதிகாலையில் கதிர்பரப்பி ஒளிகொடுக்கும் சூரியக்கதிர்கள் கருவறையில் படுமாறு கிழக்கு நோக்கி வாசல் வைத்து கோவில்களை மன்னர்கள் பெரியவர்கள் கட்டினார்கள் .மலைகளில் இருந்து பாய்ந்து வரும் புனிதமான நீர் பட்டு புத்துணர்சி கொடுக்கும் வகையில் அவற்றின் அமைவிடங்கள் பண்டையகாலத்தில் இருந்தது .நறுமணம் வீசும் மலர் மரங்களில் பட்டு வரும் சுகந்தமான தென்றல் காற்று பட்டு வழிபட வரும் மக்கள் மனங்கள் குளிரும் வகையில் எம்முன்றோர்கள் ஆலயங்கள் அமைத்தார்கள் .ஆலய வீதிகளில் விறகு வைத்து மக்கள் பொங்கல் செய்து முறைப்படி திருமுறை பாடி அடியவர்களுக்கு பகிர்ந்து அளித்து வீடு வரும் முன்னே முகில்கள் உரசி மழை பொழிந்து மண் மணக்கும் .இவ்வாறு மக்கள் நன்மைகளை கருத்தில் கொண்டு எம் முன்னோர்களால் தவத்திருக்களால் கட்டப்பட்டகோவில்களின் இன்றைய நிலை என்ன ,,,,,,,
உலகத்துக்கு நாகரீகத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் கலைகளையும் கற்று கொடுத்த நாகர்கள் வாழ்ந்த தேசங்களில் இன்று கோவில்கள் எவ்வாறு பராமரிக்கபடுகின்றது .இயற்கையோடு ஒன்றி அவர்களால் அமைக்கப்பட்ட புராதன வழிபாட்டு தலங்கள் எவ்வாறு மாற்றி அமைக்கபடுகின்றது .சுயம்பாக தோன்றிய லிங்கங்களின் கருவறைகள் எந்த காரணங்களால் மாற்றி அமைக்கபடுகின்றது .பிரபஞ்ச சக்திகள் எதுவுமே உள்நுழைய முடியாமல் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றி இயற்கையாக அமைந்த கருவறைகள் ஏன் கடும் சிறைகளாக மாற்றப்படுகின்றது . புகழ் பெற்ற புராதன ஆலயங்கள் ஏன் பண முதலைகளாலும் நான் என்ற கர்வம் அகங்காரம் பிடித்த தனிநபர்களாலும் வியாபார நிறுவனங்கள் ஆக்கபடுகின்றது .இரு கைகூப்பி தொழுத கரங்கள் ஏன் புகைப்பட கருவிகளை உயர்த்தி படம் பிடிக்கின்றது .ஆலய வழிபாடு என்பதன் அர்த்தம் ஏன் திசைமாறி பயணிக்கின்றது .
அரசமர நிழலிலும் ஆலமரத்தடியிலும் வீற்று இருந்த பிள்ளையார் வினைகள் தீர்த்தார் என்பதும் .குன்று தோறும் கோவில் கொண்டு எழுந்தருளிய குமரன் குற்றம் செய்தவர்களை அழித்தார் என்பதும் ,அலையின் தாலாட்டில் நாககுடை நிழலில் வீற்று இருந்த அம்பிகை கடல் அழிவுகளில் இருந்து நாகர்குலத்தை காலம் காலமாக காப்பாற்றி நல்லருள் கொடுத்தாள் என்பதும் .வரலாறுகள் சொல்லும் உண்மைதான் .
மாபிள் பதிக்க பட்ட கருவறையில் செயற்கை ஒளி கொடுத்து மின்னும் தங்கத்தில் லிங்கம் செய்து வைத்து காற்று உள்புகாத கட்டடத்துக்குள் நின்று வழிபடுவதால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் .மண்ணில் அங்கம் படாமல் மாபிள் பதிக்கப்பட்ட நிலத்தில் அங்கபிரதட்சணம் செய்வதால் என்ன பயன் .அங்கபிரதட்சணம் என்பதன் அர்த்தம் என்ன ,,
உடலின் உள்ள தேவையற்ற நோய் கிருமிகளை வெளியேற்றி உடலின் சகல அங்கங்களும் ஒழுங்கான முறையில் தொழில்படுவதர்காக பஞ்ச பூதங்களின் நேரடி தொழில் பாடு நடக்கும் புனிதமான நிலத்தில் விழுந்து உருளுதல் அதாவது நீரில் தோய்ந்து மண்ணில் புரண்டு சூரிய ஒளியால் உடலில் சூடு வாங்கி உடலில் உள்ள மாசுக்களை தென்றலால் தவழ்ந்து வரும் சுகந்தமான காற்றால் வெளிஏற்றுதலே அங்கபிரதட்சணம் .எம் முன்னோர்கள் விதிகளை சரியாகவே வகுத்தார்கள் .அவற்றை நெறிப்படும் தற்காலத்தவர்களே அவற்றை தவறாக பயன்படுத்துகின்றார்கள் .அங்க பிரதட்சணம் செய்பவர்கள் கை கூப்பி இருக்கவேண்டும் என்பதற்காக தேங்காயை தேசிக்காயை கையில் கொடுப்பார்கள் உருளும் பொழுது தலையை உயர்த்தியும் வணங்கும் பொழுது தலையை மண்ணில் முட்டியும் செய்வது தான் வழக்கம் .இன்று உருளும் பொழுது தலையை உயர்த்தி கைகாட்டி படத்துக்கு முகம் காட்டி சிரிக்கின்றார்கள் .
ஆலயங்கள் பொதுவான இடம் என்பதால் எல்லோரும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் வரிசையாக இருந்து வழிபாடும் முறையை எம் முன்னோர்கள் நெறிப்படுத்தினார்கள் .ஆனால் இன்று நான் பெரிது நீ பெரிது என்ற நிலை தோன்றி கடவுளை மற்றவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் பார்க்கமுடியாமல் மறைத்து பலர் திரு நந்திகளாக நிற்கின்றார்கள் .நந்தியை விலக சொல்லி நந்தனார் கேட்டு கொண்டத்துக்காக கருங்கல் நந்தி கூட விலகி நந்தனாருக்கு வழிபாட்டுக்கு வழி விட்டதாக வரலாறுகள் சொல்கின்றது ஆனால் எம்மவர்கள் சுயநலங்களால் கட்டப்பட்டு ஆலயத்துக்கு வரும் அடியவர்களுக்கு இறை பீடம் தெரியாமல் மறைத்து நிற்கின்றார்கள் .ஆளுக்கு ஒரு சட்டம் ,குலத்துக்கு ஒரு நீதி ,படத்துக்கும் பதவிக்கும் பணத்துக்கும் ஆன சுயநல ஆசைகளை நிறைவேற்றும் குத்தகை நிலங்களாகவும் இடங்களாகவும் ஆலயங்களை மாற்றுவதை யாராலும் ஏற்கமுடியாது .நிர்வாகம் என்று சொல்லிகொள்பவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்ககூடாது இன்று எம் தாய் நிலங்களில் தவறான பாதையில் ஆலயங்களை நெறிப்படுத்துகின்றார்கள் .மனித குலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்றால் நாம் எம் முன்னோர்கள் வகுத்த வழிமுறைகளை வழிபாட்டு நெறிகளை சரியாக வழிப்படுத்த வேண்டும் .கடலில் பூசை செய்யும் பொழுது கருடனும் பாம்பும் ஒற்றுமையாக வருகின்றது அந்த புதுமை இன்றும் நடக்கின்றது என்றால் இயற்கைக்கு சக்தி உண்டு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்க படுகின்றது .எனவே செயற்கைகள் செய்து கோவில்களில் புனிதத்தை கெடுக்காமல் கட்டிடங்கள் மாடமாளிகைகள் கோட கோபுரங்கள் கட்டி இருக்கும் தெய்வ சக்தியை கலைக்காமல் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இறை வழிபாட்டை மேம்படுத்தி மென்மையான சைவ நெறியை வாழ வைப்போம் உலகெல்லாம் ,,,,,,,,,,,,நன்றியுடன் சிவமேனகை ,,

No comments:

Post a Comment