தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 30, 2013

தஞ்சாவூர் கடப்பா!


தஞ்சாவூர் கடப்பா

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு ( சிறியது ) - 1
கேரட் - 1
பீன்ஸ் - 2 அல்லது 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2-3 ( தேவைக்கேற்ப)
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - சிறு துண்டு
முந்திரிப் பருப்பு - 4
பிரிஞ்சி இலை - 1
கிராம்பு - 2
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது.

செய்முறை

காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பூண்டு, வெங்காயம், இஞ்சி, முந்திரி, பச்சை மிளகாய் இவற்றை
விழுதாக அரைத்துக் கொள்ளவும். ( பச்சையாகவே) .

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பிரிஞ்சி இலை, கிராம்பு இவற்றைப் பொரிக்கவும். பிறகு காய்கறிகளைப் போட்டு தேவையான அளவு நீர் விட்டு வேக விடவும்.

வெந்த பின் அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கியபின் கொத்துமல்லி தழையால் அலங்கரிக்கவும்.

இது மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் பிரசித்தமானது. இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment