தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஜூன், 2013

ஆழமான இந்து மதம்!!

சிறந்த விளக்கம்!!
***************
விவேகானந்தர்,

""இந்தியாவிலிருந்து இந்து தர்மத்தை பிரித்துவிட்டால், இந்தியா உலகத்தின் சுடுகாடாகிவிடும்''

என்று சொல்லியிருக்கிறார் !!

திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மரபுக்கான இந்திய நிறுவனத்தின் இயக்குநர், டாக்டர் என். கோபாலகிருஷ்ணன், சென்னை, மகாலிங்கபுரம் அய்யப்பன் கோயில் அரங்கத்தில் சமீபத்தில் சனாதன தர்மம் குறித்தும் மதம் மற்றும் ஆன்மிகம் குறித்தும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார். அரங்கத்திலிருப்பவர்களை இரண்டுமணிநேரத்திற்கு அப்படியே கட்டிப் போட்டு வைத்திருந்தது, கோபாலகிருஷ்ணனின் தெளிவான, நிதானமான பேச்சு. சனாதன வெள்ளம் பாய்ந்த அந்தச் சொற்பொழிவிலிருந்து சில துளிகளை இங்கே தருகிறோம்:

""இந்த உலகத்தில் 122 நாடுகள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகின்றன. 68 நாடுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றன. 9 நாடுகள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றன. ஆனால் உலக மக்கள் தொகையில் 100 கோடி இந்துக்களை கொண்டிருந்தாலும் ஒரு நாட்டில் கூட இந்து மதம் பின்பற்றப்படவில்லை. நேபாளம் இந்துக்களின் நாடு என்று சொல்லப்பட்ட நிலையை சீதாராம் யெச்சூரி போன்ற அரசியல் பிரமுகர்கள் மாற்றிவருகின்றனர்!

கிறிஸ்துவர்களின் புனித நூல் பைபிள். இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆன். ஆனால் இந்துக்களுக்கு 2000 புத்தகங்கள் இருக்கின்றன. அதற்கு 10 ஆயிரம் விளக்கங்கள் இருக்கின்றன. 1 லட்சம் உபவிளக்கங்களை ஆயிரமாயிரம் ஆச்சாரியர்கள், கி.மு.8275-லிருந்து நமக்குக் கொடுத்திருக்கின்றனர். அவ்வளவு பழமையானது. அவ்வளவு ஆழமானது இந்து மதம்.

வால்மீகி, கம்பர், துளசிதாசர்... எனப் பலரின் எழுத்தில் இராமாயண இதிகாசங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே 200-க்கும் மேற்பட்ட ராமாயணக் கதைகள் இருக்கின்றன என்கிறார்கள். எத்தனை புராணங்கள், எத்தனை கடவுள்கள்... எதற்கு இத்தனை என்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது பண்பாட்டின் தத்துவம். இதைத் தொடக்கம் முதல் பிரதிபலித்துக் கொண்டிருப்பதே நம் சனாதன தர்மம். ஒருவனை வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேற்றுவதே சனாதன தர்மம். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன், அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் அவன் பிறருக்குச் செய்யும் கடமைகளும் இருக்கின்றன. அதைச் சரியாகச் செய்வதே வாழ்க்கையின் லட்சியமாக இருக்கவேண்டும். மாத்ரு தர்மம், பித்ரு தர்மம், ஆச்சார்ய தர்மம், ராஜ தர்மம்... என அனைவருக்கும் உள்ள கடமைகளைச் சொல்வதே சனாதன தர்மம். இந்தக் காலத்தில் எந்த தர்மமும் இல்லாத இருவர் உண்டென்றால், அவர்கள் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்தான்!

இதிகாச புராண சம்பவங்களை நடைமுறை அறிவியலுக்கு முன்னோடி என்று யாரிடமும் வாதிடாதீர்கள். உதாரணமாக, அந்தக் காலத்திலேயே புஷ்பக விமானத்தில் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அறிவியலோடு ஒப்பிடாதீர்கள். அதற்குப் பதிலாக, பரத்வாஜ முனிவர் படைத்திருக்கும் "விமான தந்திரம்' பற்றிச் சொல்லுங்கள். அதில் இன்றைய அறிவியல் தொடர்பான பல குறிப்புகள் இருக்கின்றன. இதிகாசக் கதைகள் தொடர்பாக குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். தெரியாவிட்டால், "எனக்குத் தெரியாது.. யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்' என்று நேர்மையாகச் சொல்லுங்கள்.

நம் கடவுள்தான் உயர்ந்தது என்று நம்முடைய மதம் சொல்லவில்லை. புத்தி, எண்ணம், செயல், விளைவு, வெகுமதி இந்த வரிசையில் வரும் பயனே சொர்க்கம் என்றும், இதில் எதிர்மறையான விளைவை நரகம் என்கிறது நம் தர்மம். "லோகா சமஸ்தா சுஹினோ பவந்து ' என்று உலக அமைதியை நன்மையை வேண்டுவது நமது இந்து தர்மமே.

இந்த உண்மை தெரிந்திருந்ததால்தான் விவேகானந்தர், ""இந்தியாவிலிருந்து இந்து தர்மத்தை பிரித்துவிட்டால், இந்தியா உலகத்தின் சுடுகாடாகிவிடும்'' என்று சொல்லியிருக்கிறார்.

இறுதியாக ஒரு செய்தி, நாம் எந்த மதத்திற்கும் எதிரிகள் அல்ல. ஆனாலும் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் உண்மைகளைச் சொல்லியாக வேண்டும். அருணாசலப் பிரதேசத்தில் இருக்கும் இந்துக்களில் ஏறக்குறைய 90 சதவிகிதத்திற்கு மேல் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்டுவிட்டனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மதமாற்றங்கள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் சென்னை புறநகர் ரயிலில் கும்மிடிப்பூண்டி வரை பயணம் செய்து பாருங்கள். உண்மை புரியும். ஒüரங்கசீப் காலத்தில் கூட இந்தளவுக்கு மதமாற்றங்கள் நடக்கவில்லை; கொலைகள்தான் நடந்தன... இன்றைக்கு அவ்வளவு வேகமாக மதமாற்றங்கள் நடக்கின்றன. சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்னும் புரிதலை மக்களிடம் கொண்டு சென்றால், இத்தகைய மத மாற்றங்கள் நடக்காது.

thanks:-dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக