தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 ஜூன், 2013

உடலுறவு வைத்துக் கொள்ள மறுக்கும் கணவனை முஸ்லிம் பெண்கள் தூக்கி எறியலாம் : கேரள ஹைகோர்ட் தீர்ப்பு!


உடலுறவு வைத்துக் கொள்ள மறுக்கும் கணவனை முஸ்லிம் பெண்கள் தூக்கி எறியலாம் : கேரள ஹைகோர்ட் தீர்ப்பு! 


இஸ்லாமிய கோட்பாடுகளின் படி, திருமணம் என்பது வெறும் சடங்கு சம்பிரதாயம் அல்ல, மாறாக அது ஒரு சிவில் ஒப்பந்தத்தை போன்றதாகும், தகுந்த காரணமின்றி உடலுறவு வைத்துக்கொள்ள மறுப்பது, பெண்ணின் மீது இழைக்கப்படும் அநீதியாகும்.


3 ஆண்டுகளுக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளாத கணவரை விவாகரத்து செய்யும் உரிமை முஸ்லிம் பெண்ணுக்கு உண்டு என, நீதிபதிகள் குரியகோஸ் மற்று ராஜன் அடங்கிய அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து "சஞ்சன்" என்பவர் தொடர்ந்த வழக்கில்,

உடலுறவைப் பொறுத்தவரை, மனைவியின் விருப்பத்தை நீண்ட காலம் வரை நிறைவேற்றாமல் இருப்பது அநீதியாகும், என கருத்து தெரிவித்த நீதிபதிகள், குடும்ப நீதிமன்றத்தில் சஞ்சன் மனைவிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தனர்.

1939ம் வருடத்திய முஸ்லிம் மேரேஜ் ஆக்டின் பிரிவு 2ல், தகுந்த காரணம் இல்லாமல் 3 ஆண்டுகளுக்கு மேல் மனைவியிடம் உடலறுவு கொள்ள மறுக்கும் கணவர்களை விவாகரத்து செய்யும் உரிமை பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

1999 மே மாதம் 16ந்தேதி திருமணமான சஞ்சன் தம்பதியினருக்கு, ஆகஸ்ட் 2004ல் குழந்தை பிறந்தது.


பிப்ரவரி 2004 முதலே உடலுறவுக்கு மறுத்து வந்த கணவரின் வீட்டிலேயே 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்த மனைவி, 2007ல் கணவரின் வீட்டை விட்டு வெளியேறி, குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்துக்கு பெற்றார்.

முன்னதாக சஞ்சன் சார்பில் ஆஜரான வக்கீலின் வாதங்களுக்கு, அவரது மனைவியின் சார்பில் ஆஜரான வக்கீல் பிகே இப்ராஹீம் திறமையான வாதங்கள் மூலம் பதிலடி கொடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக