தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 13, 2013

விஷம் முறிக்கும் ஆடு தின்னாப்பா(லை)ளை (மூலிகை)


 விஷம் முறிக்கும் ஆடு தின்னாப்பா
லை(ளை )(மூலிகை)

வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடியினமாகும். முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களை உடையது. கால்நடைகள் மேய்ச்சக் காலில் ஒரு கடி கடித்து அசக்காமல் விடாது. ஆனால் இந்த இலையை மட்டும் நுகர்ந்து பார்த்துவிட்டு கடிக்காமல் விட்டு விடும். 

சிலர் ஆடாதொடை மூலிகையை ஆடு தின்னாப் பாளை என்று நினைப்பார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இதன் இலைகள் காம்புடன் கூடிய சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன் இருக்கும். ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். இது கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித் தன்மையுடையது. இதனால் இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும்.

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது. வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

வேறு பெயர்கள்: ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ.
ஆங்கிலப் பெயர்: Aristolochia bracteata, Retz, Aristolochiaceae.

மருத்துவக் குணங்கள்:

ஆடு தின்னாப் பாளையின் இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.

ஆடு தின்னாப் பாளையின் வேரை அரைத்து 2 வேளை 5 கிராம் வெந்நீரில் சாப்பிட வைத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)

ஆடு தின்னாப் பாளையின் வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.

இதன் விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள் நீங்கும்.

ஆடு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.

இனிப்பு -நல்ல பாம்பு,
இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு,
தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு,
உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு,
கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு,
காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு,
புளிப்பு -வழலைப் பாம்பு,
புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு,
முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு,
நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு,
நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு,
கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு,
பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.

ஆடு தின்னாப் பாளை இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்றுகள் குணமாகும்.
ஆடு தின்னாப் பாளை, பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.
ஆடு தின்னாப் பாளையிலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.

ஆடு தின்னாப் பாளை இலையைப் பொடியாக்கி, புகையிலையில் வைத்து சுருட்டு சுற்றிப் புகை பிடித்தால் சுவாச காசம் குணமாகும்.

ஆடு தின்னாப் பாளை இலை 100 கிராமும், மிளகு 10 கிராமும் எடுத்து அரைத்து மாத்திரைகளாகப் பட்டாணியளவு உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.

ஆடு தின்னாப் பாளைச் சாறு 200 மில்லியளவு, நல்லெண்ணெய் 400 மில்லி சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலை முழுகி வர மண்டைக்குத்து, தலைவலி நீங்கும்.
ஆடு தின்னாப் பாளைச் சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.

ஆடு தின்னாப் பாளைவேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.

நன்றி:மூலிகைவளம்

No comments:

Post a Comment