தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 24, 2013

தமிழ் - தாய் மொழி ஒற்றுமைகள்:



தமிழ் - தாய் மொழி ஒற்றுமைகள்:
1. தங்கம் தொங்கம்
2. கப்பல் கம்பன்
3. மாலை மாலே
4. கிராம்பு கிலாம்பு
5. கிண்டி கெண்டி
6. அப்பா பா
7. தாத்தா தா
8. அம்மா மே, தான்தா
9. குரு க்ரு
10. ஆசிரியர் ஆசான்
11. பாட்டன் பா, புட்டன்
12. பிள்ளை புத், புத்ரா
13. வீதி வீதி
14. மூக்கு சாமுக்
15. நெற்றி நெத்தர்
16. கை கை
17. கால் கா
18. பால் பன்
19. சாதி சாத்
20. தொலைபேசி தொரசாப்
21. தொலைக்காட்சி தொரதாட்
22. குலம் குல்
23. நங்கை நங்
24. துவரை துவா
25. சிற்பம் சில்பா
26. நாழிகை நாளிகா
27. வானரம் வானரா
28. வேளை வேளா(Time)
29. மல்லி மல்லி
30. நெய் நெய்யி
31. கருணை கருணா
32. விநாடி விநாடி
33. பேய்/பிசாசு பிச/பிசாத்
34. கணம் கணா(Moment)
35. விதி விதி
36. போய் பாய்
37. சந்திரன் சாந்
38. ரோகம் ரூகி
39. தூக்கு தூக்
40. மாங்க் மாங்காய்
41. மேகம் மேக்,மீக்
42. பிரான், எம்பிரான் பிரா
43. யோனி யூனி
44. சிந்தனை சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு சான்க்
46. தானம் தார்ன்
47. பிரேதம் பிரீதி
48. நகரம் நகான்
49. பார்வை பார்வே
50. ஆதித்தன் ஆதித்
51. உலகம் லூகா
52. மரியாதை மார-யார்ட்
53. தாது(Elements) தாட்
54. உலோகம் லூகா
55. குரோதம் குரோதீ
56. சாமி சாமி (Husband)
57. பார்யாள் பார்யா (wife)
58. திருவெம்பாவை த்ரீயம்பவாய்
59. திருப்பாவை திரிபவாய்
60. கங்கை கோங்கா
61. பட்டணம் பட்டோம்
62. ராஜா ராஜ்
63. ராணி ராணி
64. தர்மசாத்திரம் தம்மசாட்தாய்லாந்து மக்கள் பேசும் தாய்-மொழியில் கிழமை, "வாரம்" என்று வழங்கப்படுகிறது. தமிழ் முறைப்படியே ஒரு வாரத்திற்குரிய ஏழுநாட்களின் பெயர்களும் வழங்கி வரு கின்றன. மற்றும் இன்றைய பேச்சு வழக்கில் தமிழில் வழங்கும் சொற்கள் தாய்-மொழியில் ஏராளமாகத் திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டுகள் கீழ் வருமாறு :
குறிப்பிட்ட சொற்களில் தமிழில் இடம்பெறும் சில திராவிட சமஸ்கிருத மொழிச் சொற்களும் உள்ளன. இவைதவிர தமிழ்நாட்டு மக்கள் இன்றும் கூட பொதுவாக சூடிக்கொள்ளும் பெயர்கள் தாய்லாந்திலும் வழங்கப்படுகின்றன. இருண், வசந்தா, ரத்னாவலி, மணி, காஞ்சனா, மாலவிகா, சக்தி, வாசுதேவ், பத்மாவதி, பிரியா, மான்சூலா, புசுபா, சாந்தி, சுசிலா, வருணி, அருணி, குமார், சூர்யா, சந்திரா, ஸ்வர்ணா, ராசன், லக்ஷ்மி, மீனா, சுரேஷ், ரமேஷ், பிரேமா, சம்பா, கருணா, ராதா, கிருஷ்ணா, மனோஹர், சுகன்யா, பிரசாத் போன்ற தமிழ்ப் பெயர்களை தாய்லாந்து மக்கள் சூடி வருகிறார்கள். பல்லவ, சோழப் பண்பாட்டுத்தாக்கம், தமிழ் மொழித்தாக்கம், தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கம் தாய்லாந்தில் ஆட்கொண்டிருந்ததால் இத்தமிழ்நாட்டுப் பெயர்கள் தாய்லாந்தில் பரவலாக வழங்கி வருகின்றன.

தாய்லாந்தில் உள்ளூர் பெண்கள் ஆடும் நடனங்கள், மேஜிக் ஷோ, சர்க்கஸ் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் உண்டு. சிங்கப்பூர் வழியாகப் புதிதாக வரும் வீடியோ தமிழ்ப்படங்கள் 100 அல்லது 150 நாட்களுக்குள் தாய்லாந்துக்கு வருகின்றன. எல்லோரும் தமிழ்ப்படம் மட்டும் விரும்பிப் பார்ப்பார்கள். ஒரு தனிப்பட்ட ஹ“ரோ அல்லது ஹ“ரோயின் வழிபாடு கிடையாது. தனித்தமிழர் மன்றம் இல்லை. தமிழ் அச்சகம் கிடையாது. குமுதம், மங்கையர் மலர், சுமங்கலி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், தராசு, தினமணி, முதலிய தமிழ் இதழ்கள் சிங்கப்பூர் வழியாக வந்து தாய்லாந்தில் கிடைக்கின்றன.


No comments:

Post a Comment