தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்!


மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்!

1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து

2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும் போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.

3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.

4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..

5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.

7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.

10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குறவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

@சிவ சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக