தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஏப்ரல், 2013

ஹிந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே!!


தெய்வீகச் செய்தி: நான் கூறுவதைக் கவனத்திற் கொள்க. ஹிந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான்,அப்பொழுது மட்டுமே, நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதருக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்து சமயப் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் – ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! – யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட – அவர், அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.

கவனத்திற் கொள்ளுங்கள். உங்களது நாட்டுக்கு நன்மை செய்ய நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்கனாக ஆகவேண்டும். உங்களது நாட்டு மக்களிடையே ஆயிரக் கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து இரத்தத்தைக் கவனியுங்கள். உங்களைத் தாக்கிப் புண்படுத்த அவர்கள் நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உங்களுக்குச் சாபமாரி பொழிந்தாலும், நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையே திருப்பியளிக்க வேண்டும். உங்களை அவர்கள் வெளியே துரத்தினால், மகா சக்திசாலியான அந்த சிங்கத்தைப் போல, குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய லட்சியத்தையே நாம் எப்போதும் நம் முன் வைத்திருப்போமாக.

நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையில்லும் இந்த அபாரமான அன்புணர்ச்சி அலையைப் பரப்புவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக