தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 25, 2013

வெந்நீர்


வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளிப்படுத்துகிறது. அடிக்கடி வெந்நீர் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்களுக்கு தலைவலியே வருவதில்லையாம். சிறு வயதுள்ள குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலியும் வெந்நீர் கொடுப்பதனால் குணமாகும்.

வயிற்றுப் புண்ணினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மிதமான சூடான வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்தால் வலி குறையும். இரண்டு தேக்கரண்டி சர்க்கரை ப்ளாஸ்கில் போட்டு வெந்நீர் விட்டு பத்து நிமிடம் ஊற வைத்து பிரஷ் போட்டுக் கழுவினால் "தெர்மோஃப்ளாஸ்க்' பளிச்சென்று ஆகிவிடும்.

உடல் நோய்வாய்ப்படும் போது வெந்நீர் குடிக்க விரைவில் குணமாகும். சூடாக உள்ள நீரில் குளிர்ந்த நீரைக் கலந்து குடிப்பது கூடாது. வெந்நீரை ஆற்றிக் குடித்தால்தான் உரிய பலன் கிடைக்கும். பித்த வெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, "பியூமிக் ஸ்டோன்' கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்புகள் குணமாகும். கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் ஊற்றி அதில் சிறிது கல் உப்பைப் போட்டு, அதில் காலை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும்.

No comments:

Post a Comment