தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 மார்ச், 2013

இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார்


இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார்
-----------------
பாகம்-43
-------------
முகம்மதுகாசிம் வெற்றிபெற்றவுடன் 17வயதுக்கு மேற்பட்ட பார்ப்பனர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்
------------
முஸ்லீம்களின் காட்டுமிராண்டி படையெடுப்புகளில் பல முஸ்லீம்களுக்கிடையிலான போர்களும் நிகழ்ந்துள்ளன

இந்தியாமீது படையெடுத்து வந்தவர்கள் தார்த்தாரியர், ஆப்கானியர், மங்கோலியர் எனப் பல்வேறு இனத்தவர்கள் என்பதே மெய். கஜினி முகமது தார்த்தாரியர், கோரி முகமது ஆப்கானியர், தைமூர் மங்கோலியர், பாபர் தார்த்தாரியர், நாதிர்ஷாவும் அகமதுஷா அப்தலியும் ஆப்கானியர்.

இந்தியப் படையெடுப்புகளில், தார்த்தாரியரை அழிக்க ஆப்கானியர் நடத்திய படையெடுப்புகளும் தார்த்தாரியரையும் ஆப்கானியரையும் அழிக்க மங்கோலியர் நடத்திய படையெடுப்புகளும் அடங்கும்.

முஸ்லீம் படையெடுப்பாளர்கள் அனைவரையும் சமய சகோதரத்துவ அன்பால் பிணைக்கப்பட்ட, ஒரே குடும்பத்தவராய்க் கருதுதல் கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் கடும் பகைவர்களாக விளங்கி மாற்றாரைப் பூண்டோடு அழிக்கும் போர்களை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு தமக்கிடையே பலபோர்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் கூட, இந்து மத நம்பிக்கையை ஒழிக்கும் நோக்கத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருந்தனர் என்பதை நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இந்திய வரலாற்றுப் போக்கினை ஆராயும்போது, படையெடுப்பாளர்களின் அடிப்படை நோக்கமே, அவர்கள் கையாண்ட முறைகளைவிடப் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

படையெடுப்பில் வென்ற காசிம் முகம்மதுவின் முதல் சமயச் செயலே தேபூல் நகரில் சிறைப்பிடிக்கப்பட்ட பார்ப்பனர்கள் அனைவரையும் சுன்னத் செய்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தியதே ஆகும். இத்தகைய பலவந்த மதமாற்றத்திற்கு வலுவான எதிர்ப்பு காட்டப்பட்டதால் 17 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர், ஏனையோர், பெண்கள், குழந்தைகள் உட்பட, அடிமைகளாக்கப்பட்டனர்.

மேலும், இந்துக் கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கிடைத்த கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கை அரசாங்கத்துக்கு ஒதுக்கி, மீதியைப் படையினரே பங்குபோட்டுக் கொண்டனர்.

கஜினி முகம்மது தொடக்கத்திலிருந்தே இந்துக்களின் உள்ளங்களில் பீதியைத் தோற்றுவிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டனர். கி.பி.1001-இல் ஜெய்பால் அரசர் தோற்கடிக்கப்பட்டபோது அடிமையின் தலைகளை வீதிகளில் இழுத்துவந்து அவர் அவமானப்படுவதை அரசரது படைத்தலைவர்களும், மகன்களுமே காணச்செய்தார், இதன்வழி புறச்சமயிகளின்(இந்துக்கள்) பூமியில் இஸ்லாத்தைப் பற்றிய அச்சம் கொடிகட்டிப் பறந்திடுவதையே அவர் விரும்பினார்.

புறச்சமயிகளைக் கொன்றழிப்பது (கஜினி) முகம்மதுவுக்குத் தனியானதோர் இன்பமாகவே இருந்தது. கி.பி.1019-இல் சந்தராய் நகரின்மீது நடந்த படையெடுப்பில் ஏராளமான புறச்சமயிகள் கொல்லப்பட்டனர். முஸ்லீம்கள் கொள்ளைப் பொருள்களோடு எளிதில் திருப்தியடைந்து விடுவதில்லை. சூரியனையும் தீயையும் வணங்கும் புறச்சமயிகளைக் கொன்றுகுவிக்கும் வெறியே கொள்ளை நாட்டத்தைவிட அவர்களிடம் மிகுதியாக இருந்தது.

முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள், இந்துப் படைகளைச் சேர்ந்த யானைகள் அப்படைகளிலிருந்து விலகி இஸ்லாத்தின் சேவைக்காக முஸ்லீம் படைகளுடன் சேர்ந்து வருவதாகக்கூட எழுதியுள்ளனர்.


-----தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக