தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, February 10, 2013

வித்தியாசத்தை தெரிந்து கொள்!



  • வித்தியாசத்தை தெரிந்து கொள்!

    அந்த ஜென் துறவியை எல்லோரும் உயர்ந்ததாக கூறுவதை அறிந்த மன்னன். அவரை தனது குருவாகவே எண்ணினான். அவரின் குடிசைக்கு சென்று அவரை வணங்கி..., "சுவாமி..! நான் உங்களை என்னுடன் அரண்மனைக்கு அழைத்து போக வந்திருக்கிறேன். இனி நீங்கள் இங்கு ஏன் வாழ வேண்டும்..!"

    தான் இவ்விதம் அழைத்ததும் துறவி நான் எளிமையானவன் அரண்மனையில் வாழமுடியாது என்று மறுத்து விடுவார் என்று தனக்குள் எண்ணி கொண்டான். ஆனால் துறவியோ, "சரி உன்னுடன் அரண்மனைக்கு வருகிறேன்" என்றார். மன்னன் இதை கேட்டதும் அதிர்ந்து போனான். இவர் ஒரு போலி துறவியாக இருப்பாரோ..! என்று நினைத்த வாறு துறவியை அரண்மனைக்கு அழைத்து சென்றான்.

    அரண்மணைக்கு வந்த துறவி ஆடம்பர ஆடை, உணவு என்று எல்லாம் மகிழ்ச்சியாக அனுபவித்தார். சிலநாள் சென்றதும் பெறுக்க முடியாத மன்னன் துறவியை பார்த்து, "ஆடம்பர வாழ்வில் கவலையின்றி வாழும் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்..?" என்று கேட்டான்.

    "மன்னா..! அன்று நீ குடிசைக்கு வந்தபோதே உன் மனதில் என்ன இருந்தது என்று அறிவேன். அதற்கு பதில் கூறவே உன்னுடன் வந்தேன். இப்போது நான் பதில் சொல்ல வேணுமானால் நீ என்னுடன் நகருக்கு வெளியே வெகுதூரம் வர வேண்டும். அப்போது தான் பதில் சொல்வேன். வா போவோம்." என்றார். மன்னனும் உடனே கூடவே புறப்பட்டான்.

    இருவரும் நதியை கடந்து நாட்டின் எல்லைகே வந்து விட்டனர். களைத்துவிட்ட மன்னன், "பதில் சொல்ல இவ்வளவு தூரம் வரவேண்டுமா..? இதனால் என்ன பயன்..?" என்று கேட்டான்.

    "இந்த இடத்தைதான் தேடினேன் மன்னா..! இப்போது சொல்கிறேன். நான் இனி திரும்ப போவது இல்லை. என்னுடன் நீ வாறீயா..? என்று கேட்டார் துறவி.

    "என்னகேள்வி இது.. நான் உங்களோடு எப்படி வர முடியும். இது என் நாடு, என் செல்வம், என் உறவுகள் இவையெல்லாம் விட்டு எப்படி வரமுடியும்..?"

    "மன்னா வித்தியாசத்தை இப்போது தெரிந்து கொண்டாயா..? நான் போகிறேன். இனி ஒரு முறை திரும்பி கூட பார்க்க போவது இல்லை. நான் அரண்மனையில் இருந்த போது அவற்றை அணிந்தவனாகவும் உண்டவனாகவுமே இருந்தேன். அவற்றை சொந்தம் கொண்டாடுபவனாக இருக்கவில்லை. நீயோ எல்லாவற்றுக்கும் சொந்தமாகி விட்டாய்..!"

    துறவி அணிந்து இருந்த விலையுர்ந்த ஆடையை கலைந்து தனது காவியை உடுத்தார். பின்பு அந்த ஆடையை மன்னனிடம் கொடுத்து, "உன்னுடைய ஆடைகளை நீயே மகிழ்ச்சியோடு வைத்து இருப்பாயாக..!" என்று கூறி கொடுத்து விட்டு நடந்தார்.

    மன்னன் இப்போது தன் அறிவீனத்தை உணர்ந்தான். அவரது காலில் விழுந்து கண்ணீர் துளிகள் விட்டான்.

    துறவி திரும்பிப் பார்க்காது நடந்து சென்று கொண்டே இருந்தார்.

No comments:

Post a Comment