தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

ஆரைக் கீரையின் மருத்துவ குணங்கள்:-


ஆரைக் கீரையின் மருத்துவ குணங்கள்:- 

நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.

குளிர்ச்சித் தன்னம உடையது. நாக்கிற்கு நல்ல சுவை தருவது இக்கீரை. உடல் உஷ்ணத்தைத் தணித்து, குளிர்ச்சி குறையாமல் வைத்திருக்கும்.
இது அதிகமாய் வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும். அதனால் உடலில் நீர்ச்சத்து இருக்கும். வறண்ட தேகம் உடையவர்க்கு உகந்கது.
இக்கீரையைச் சமைத்து உண்டால் வெள்ளை நோய் குணமாகும். அதிகமான தாகத்தைத் தணிக்கும். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து போகும். அவர்களுக்கு இக்கீரை கண் கண்ட மருந்து. சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் மதியம் மட்டும் இக்கீரையைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சமைத்து உண்டுவர, நல்ல குணம் கிட்டும். இக்கீரை உடலுக்கு நல்ல வலுவூட்டும். இக்கீரையை வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு சக்கரையை கலந்து நாள்தோறும் குடித்து வந்தால் நோய்கள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..1


நன்றி ;கார்த்திகேயன் மதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக