தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 நவம்பர், 2012

காதல், கலியாணம் என்றால் கடுமையாக சாதி பார்க்கும் புலம்பெயர் தமிழ் பெற்றோர்!


யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் சாதித் திமிரின் எச்சங்கள் இன்று வரை நீடிக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக காதல் தொடர்பு, திருமண உறவு ஆகியவற்றைப் பொறுத்த வரை சாதியத்தின் செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகின்றது. இரு விடயங்களிலும் சாதியத்தை விட்டுக் கொடுக்க பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தயாராக இல்லை.
புலம்பெயர் நாடுகளிலும் இதே நிலைமைதான். கனடாவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மகளையும், மகளின் காதலனையும் வாகனத்தால் ஏற்றி கௌரவக் கொலை செய்ய முயன்ற கொடூரம் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.
நமது இப்பதிவு சுவிஸில் பெற்றோருடன் வாழ்ந்து வருகின்ற தமிழ் யுவதியோடு சம்பந்தப்பட்டது.
இவர் ஒரு இளைஞனை காதலித்து இருக்கின்றார். ஆனால் சாதியம் காரணமாக பெற்றோர் இவரின் காதலை கடைசி வரை புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை. சுவிஸில் வேறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும் யாழ்ப்பாண பெற்றோரின் சாதியம் பற்றிய மன நிலை மாறவே இல்லை என்பதை இவர் காணொளிப் பேட்டி ஒன்றின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
பிள்ளைகளின் நண்பர்கள் விடயத்தில் சாதி பார்க்காத பெற்றோர் காதல், திருமணம் என்று வருகின்றபோதுதான் சாதி பார்க்கின்றார்கள் என்று இவர் அழகாக சுட்டிக் காட்டி உள்ளார்.
இவர் காதலிப்பதை பற்றி பெற்றோருக்கு பிரச்சினை இல்லை, கட்டிக் கொடுக்கவும் தயார், ஆனால் இவரின் காதலன் குறைந்த சாதிக்காரனாக இருக்கக் கூடாது. இதை இவருக்கு பெற்றோர் வெளிப்படையாகவே தெளிவாக தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக