தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, November 29, 2012

உன் பாவம் உன்னோடு!


உன் பாவம் உன்னோடு!

வழிப்பறி கள்ளவனான கெளசிகன் என்ற வேடன் ஒருவன், காட்டின் வழியாக வந்த நாரதமுனியை சந்தித்தான். நாரதமுனி அவனிடம் கேட்டார், "பாவமான இத்தொழிலை யாருக்காக செய்கிறாய்..?" என்று. "என் மணைவி, மக்களை காப்பாற்றவே இதை செய்கிறேன் !"என்றான் வேடன்.

"அப்படியா,அப்படியானால் நீ அவர்களிடம் சென்று இதனால் விளையும் பாவத்தில் பங்கேற்கிறார்களா என்று கேட்டு வா..?" என்றார் நாரதமுனி.

வேடன் திரும்பி சென்று நாரதமுனி கேட்ட கேள்வியை தன் மனைவியிடம் கேட்டான். அதற்கு மனைவி, "எனக்கு என்ன தலையெழுத்தா? உன் பாவம் உன்னோடு! என்னை மணந்ததால் உன்னை நம்பி வந்த எனக்கு சம்பாதித்து போட வேண்டியவன் நீ! நீ பாவம்தான். பஞ்சமா பாதகம்தான் செய்! ஆனால் எனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது..!" என்று சீறினாள்.

வேடனின் அககண் திறந்தது. மனிதன் அவனவன் கர்மவினைகளை அவன்தான் சுமக்க வேண்டுமே தவிர வேறு யாரும் சுமக்க துணைவர மாட்டார்கள் என்பதை உணர்ந்தான். திரும்பி சென்று நாரதமுனியை வணங்கி அவரிடம் உபதேசம் பெற்று, பின்னர் வால்மீகி முனிவரார் அந்த வேடன்.

பலகொலைகளை செய்த அங்குலிமாலை கெளதமர் ஆட்கொள்ளியதும் இக்கதை போன்றே. இங்கே நாம் சுட்டிகாட்டுவது. பிறப்போ, கல்வியோ, சுற்புற சூழ்நிலையிலோ ஒருவன் ஞானம் அடைய முடியாது. அதேபோல் அவன் ஞானம் அடைய அவை தடையும் அல்ல. ஆனால் வாழ்கையில் நமக்கு அளிக்கப்பட்ட வேடத்தை அதுவே உண்மைநிலையென நம்பிவிடுகிறோம். உண்மையாக நாம் யார் என்பதை எமக்கு தெரியாது. நாம் அறிய விரும்புவதும் இல்லை.

ஞானியர் மட்டுமே தாம் யார் என்பதையும் நாம் யார் என்பதயையும் தெளிவாக அறிந்தவர்கள். நாம் ஏற்ற தயாரானால் மட்டுமே அவர்கள் முன்வருவார்கள். அதற்கு தயாரான பக்குவமான விளைநிலமாக மனதை வைத்துருக்க வேண்டியது நமது பெறுப்பு.

No comments:

Post a Comment