தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 நவம்பர், 2012

திருமந்திரம்: குரு நிந்தை கூடாமை


திருமந்திரம்: குரு நிந்தை கூடாமை ௨.௨௨.5

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே

ஞான குரு, கையில் கிடைத்த மாணிக்கம் போன்றும் கையில் இருக்கும் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் போன்றவர்... இவர் இருக்க கன்மியை குருவாக கொள்பவன் வெயிலில் காய்ந்து கிடக்கும் கல் எடுத்து சுமப்பவன் போலும், எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போல் ஆகிறான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக