தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 அக்டோபர், 2012

ஒண்டிவீரன்!!


கொரில்லாப் போர் முறையில் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். போர்த்தந்திரங்கள் முற்றிலும் தெரிந்தவர். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர். நெற்கட்டான்செவல், திருநெல்வேலி, களக்காடு, கங்கைகொண்டான், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் எல்லாம் வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியவன் ஒண்டிவீரன்.

பூலித்தேவனுக்குப் பிறகும் கூட, அவரது மகன்களுக்கு உதவ
ியாக இருந்து புதுக்கோட்டைப்போர் முதலியவற்றில் வெள்ளையர்களை எதிர்த்து வெற்றிவாகை சூடியவன். இவனைப் பற்றி வீர காவியமே பாடலாம்.நொண்டிச் சிந்து, ஒண்டிவீரன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவையே அவனது வீரத்திற்கு சாட்சி.

ஒண்டிவீரனின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை எதுவுமே இல்லை. தற்போது பாளையங்கோட்டையில் அவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டுவது அவரது வீரத்திற்குக் கிடைத்த சிறப்பு. அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த பெருமை.

ஆனால் மணி மண்டபம் இன்னும் கட்டுமானப் பணியை நிறைவி செய்யவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக