தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 அக்டோபர், 2012

ஞானத்தைத் தரும் வித்யைக்கு அதிபதிகள் இருவர்.


ஞானத்தைத் தரும் வித்யைக்கு அதிபதிகள் இருவர். 
*1. ஈஸ்வரனின் அம்சமான தட்சிணாமூர்த்தி
*2. கல்விக்கும் கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி*
**www.fb.com/thirumarai

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவள செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போன்ற கையும் - துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி
***கம்பர்; சரஸ்வதி அந்தாதி.
________________________________________
ஆயகலைகள்;
ஆராய்ந்து எடுக்கப்பட்ட கலைகள்

ஏய உணர்விக்கும்;
விரித்து உணரச் செய்யும்

என் அம்மை;
என் தாய்

உருப்பளிங்கு;
உருண்டையான பளிங்கு கல் போல்

போல்வாள்;
இருப்பாள்

இருப்பளிங்கு வாரா திடர்;
அவள் என் மனத்துள்ளே இருக்கும் போது,
ஒரு துன்பமும் எனக்கு வராது

கடி கமழ்;
உயர்ந்த மனம் வீசும்

துடி இடையும்;
சிறிய இடையும்

அனவரதமும்;
எல்லா நேரமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக