தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 அக்டோபர், 2012

மோர் குழம்பு!!!!



மதிய வேளையில் தினமும் சாதத்திற்கு ஏதாவது ஒரு காய்கறிகளை வைத்து மட்டும் தான் குழம்பு, சாம்பார் என்று சமைத்து சாப்பிடுவோம். ஆனால் அவ்வாறு குழம்பு செய்யும் போது, வீட்டில் இருக்கும் மோரை வைத்து, ருசியான ஒரு குழம்பு செய்தால் நன்றாக இருக்கும். இப்போது அந்த மோர் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மோர் - 4 கப் (சிறிது புளித்தது)
பூசணிக்காய் - 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6
வர மிளகாய் - 2
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி ஆகிய மூன்றையும் போட்டு, தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய பூசணிக்காயை தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு, மிளகு, சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, ஓரளவு அரைத்து, அதில் இஞ்சியை தட்டி போடவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
பின் அதில் மோரை ஊற்றி, அத்துடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையையும் சேர்த்து கிளறி, ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
அடுத்து வேகவைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளை, அதோடு சேர்த்து பிரட்டி, மிதமான தீயில் வைத்து வேகவிடவும். குழம்பு ரெடி ஆகும் போது, நுரைப் போல் பொங்கி வரும். அப்போது அதனை இறக்கி விட வேண்டும்.இப்போது சுவையான மோர் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக