தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, October 30, 2012

டெங்குவின் அறிகுறிகள் என்ன?


நண்பர்களே..இந்த தகவல் எல்லாம் படிக்க மட்டும் இல்லை இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும் தான்.எம்மால் முடிந்தவரை டெங்குவை ஒழிப்போம்...

டெங்குவின் அறிகுறிகள் என்ன? 

டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.

டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.

டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?

மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.
இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.
டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.

ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. 


No comments:

Post a Comment