தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, October 18, 2012

பன்னீர் நூடுல்ஸ்!!






தமிழனுக்கு பிடித்த உணவு சீனாவினதா இத்தாலியினதா??தமிழ்,தமிழுக்கு நாடு என்று பசப்பும் தமிழன் பிள்ளைகளை வளர்க்கும் முறையை பார்க்கையில் அவன் தமிழில் கொண்ட பற்று வெளி வேஷம் என்பது வெள்ளிடை மலை!!உணவைக் கூட பாருங்கள்!!!!




இன்றைய குழந்தைகளுக்கு இட்லி, தோசையெல்லாம் சாப்பிட்டு பிடித்தது போய், மேகி, நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் சைனீஸ் ஸ்டைலில் செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். அத்தகைய ருசி ஹோட்டலில் மட்டும் கிடைப்பதில்லை, வீட்டில் சமைத்தால் கூட வரும். இப்போது அந்த வகையான நூடுல்ஸில் பன்னீர் நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
பூண்டு - 4 பல் (அரைத்தது)
பன்னீர் - 1/4 கப் (நறுக்கியது)
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது அதில் நூடுல்ஸை போட்டு, சிறிது உப்பு மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மூடி, தீயை குறைவில் வைத்து 2-3 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, வெங்காயம், குடைமிளகாய், கேரட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதில் பன்னீர் துண்டுகள் மற்றும் உப்பை சேர்த்து, ஒரு முறை கிளறி தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அத்துடன் மிளகு தூள், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸை சேர்த்து கிளறி, 1 நிமிடம் வேக வைத்து, பின் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை போட்டு, அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் நூடுல்ஸ் உடன் சேரும் வரை நன்கு கிளறி இறக்க வேண்டும்.இப்போது சுவையான பன்னீர் நூடுல்ஸ் ரெடி!!!

No comments:

Post a Comment