தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

விருந்தோம்பலும் தமிழரும்!!


சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது. .பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனி
யோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார் விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று 'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள் .ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது 'விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'(கற்பியல்,11) இல்லறத்தில் கணவன் மனைவியர் இருவரும் இணைந்து விருந்தோம்ப வேண்டும் என்பதை,இளங்கோவடிகளும்,கம்பரும் தம் காப்பியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக