தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, July 18, 2012

சித்த மருத்துவ நூல்களில் உள்ள அளவைகளுக்கு சமமான மெட்ரிக் அளவைகள்


சித்த மருத்துவ நூல்களில் உள்ள அளவைகளுக்கு சமமான மெட்ரிக் அளவைகள்
நிறுத்தலளவை
1 உளுந்து 1கிரெயின்(approx) 65 மி.கிராம்.
4 யவம் 1 குன்றி 2 கிரெயின் 130 மி.கிராம்.
1 மஞ்சாடி 4 கிரெயின் 260 மி.கிராம்
6 குன்றி 1 மாஷம் 780 மி.கிராம்
3.75 குன்றி 1 பணவெடை 488 மி.கிராம்
32 குன்றி 1 வராகனெடை 4.16 கிராம்
40 குன்றி 1 கழஞ்சு 5.12 கிராம்
10 வராகனெடை 1 பலம் 41.6 கிராம்
0.25 பலம் 1 கைசா(அ) கஃசு 10.4 கிராம்
1 தோலா 180 கிரெயின் 11.7 கிராம்
3 தோலா 1 பலம் 35 கிராம்
8 பலம் 1 சேர் 280 கிராம்
40 பலம் 1 வீசை 1.4 கி.கிராம்
50 பலம் 1 தூக்கு 1.750 கிராம்
2 தூக்கு 1 துலாம் 3.50 கி.கிராம்
1 காசிடை 0.5 வராகனெடை 2.8 கிராம்
முகத்தலளவை
360 நெல் 1 சோடு 33.6 லிட்டர்
5 சோடு 1 ஆழாக்கு 168 மி.லிட்டர்
2 ஆழாக்கு 1 உழக்கு 336 மி.லிட்டர்
2 உழக்கு 1 உரி 672 மி.லிட்டர்
2 உரி 1 நாழி(படி) 1.34 லிட்டர்
4 நாழி 1 குறுணி(மரக்கால்) 5.37 லிட்டர்
2 குறுணி 1 பதக்கு 10.7 லிட்டர்
3 குறுணி 1 முக்குறுணி 16.1 லிட்டர்
2 பதக்கு 1 தூணி 21.5 லிட்டர்
3 தூணி 1 கலம் 64.5 லிட்டர்
1 தேக்கரண்டி 1 டிராம் 4 மி.லிட்டர்
1 குப்பி 24 அவுன்ஸ் 700 மி.லிட்டர்
1 தீர்த்தக்கரண்டி 1.33 மி.லிட்டர்
1 நெய்க்கரண்டி 4 மி.லிட்டர்
1 உச்சிக்கரண்டி 16 மி.லிட்டர்
1 பாலாடை 30 மி.லிட்டர்
1 எண்ணைக்கரண்டி 240 மி.லிட்டர்
நீட்டலளவை
1 விரல்கடை 0.75 அங்குலம் 1.95 செ.மீட்டர்
1 சாண் 9 அங்குலம் 22.86 செ.மீட்டர்
1 முழம் 18 அங்குலம் 45.72 செ.மீட்டர்
1 பாகம் 72 அங்குலம் 182.88 செ.மீட்டர்

கால அளவை
1 நொடி 1 செகண்டு
60 நொடி 1 நிமிடம்
1 நாழிகை 24 நிமிடம்
2.5 நாழிகை 60 நிமிடம்(1 மணி)
1 முகூர்த்தம் 90 நிமிடம்(1.30 மணி)
1 சாமம் 3 மணி
8 சாமம் 1 நாள்
1 பக்ஷம் 15 நாட்கள்
1 மாதம் 30 நாட்கள்
1 மண்டலம் 45 நாட்கள்
1 காலம்(ருது) 2 மாதங்கள்
1 அயனம் 6 மாதம்
2 அயனம் 1 வருடம்

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment