தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, July 13, 2012

முகத்தில் மச்சம் இருக்கிறதா? இதைப் படிங்க...



ஒரு சிலருக்கு மச்சங்கள் பிறப்பிலேயே இருக்கும். அதனை அதிர்ஷ்டம் என்று சொல்வர். சிலருக்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட இடங்களில் மச்சம் இருக்கும். அழகைக் கெடுக்கும் வகையில் கூட அவை இருக்கும். ஆனால் மச்சத்தை விரட்டுவது சாதாரண காரியமன்று. இருப்பினும் முறையான மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றினால் மச்சத்தையும் கூட அகற்ற முடியும்.
நமது தோலில் உள்ள மெலனோசைட் எனப்படும் நிற செல்கள் ஒரு இடத்தில் அதிகமாக சுரந்தால் சேர்ந்தால் வருவதுதான் மச்சம். அதேசமயம், அதிக அளவில் சேர்ந்தால் அதாவது மச்சம் வளர்வது போலத் தெரிந்தால் அதை உடனே கவனிக்க வேண்டும். காரணம் அது தோல் புற்றுநோயாக இருக்கலாம்.
இத்தகைய மச்சங்களை எளிமையான வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி ஈஸியாக நீக்கலாம்.
1. கொத்தமல்லி இலையை நன்கு அரைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் செய்து, மச்சம் உள்ள இடத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின்பு கழுவலாம். இதனை தினமும் செய்து வந்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
2. பூண்டு மற்றும் கிராம்பை சற்று அரைத்து மச்சம் உள்ள இடத்தில் வைத்து 30 நிமிடம் கட்டிவிட வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் மச்சமானது மறையலாம்.
3. வெள்ளை எருக்கு செடியின் சாற்றை மச்சம் இருக்கும் இடத்தில், இரவில் படுக்கும் முன் தடவி படுக்க வேண்டும். பின் காலையில் எழுந்து அதனை மறக்காமல் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பருக்களானது நாளடைவில் மறையும்.
4. பேக்கிங் சோடாவுடன் சிறிது ஆமணக்கெண்ணெயை ஊற்றி பேஸ்ட் போல் செய்து, படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும்.
5. மச்சம் உள்ள இடத்தில் ஆமணக்கெண்ணெயை வைத்து தினமும் இரண்டு முறை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மச்சமானது மென்மையடைந்து, சருமத்தில் இருந்து போய்விடும். மேலும் இது அரிப்பையும் தடுக்கும்.
6. முருங்கையின் சதைப்பகுதியை எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, மச்சத்தின் மீது தடவ வேண்டும். முக்கியமாக அந்த கலவையை தேய்க்கக் கூடாது.
7. மச்சத்தை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும். பிறகு ஆப்பிள் சாற்றை காட்டன் கொண்டு தடவ வேண்டும். பிறகு அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், மச்சம் காணாமல் போய்விடும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், உடலில் அதிகமாக இருக்கும் மச்சத்தை நீக்கி அழகைக் கூட்டுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

No comments:

Post a Comment