தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜூலை, 2012

மகாபாரதத்தில் கண்ணன் காட்டிய விஸ்வரூபம்!


 surya-sahasrasya
bhaved yugapad utthita
yadi bhah sadrsi sa syad
bhasas tasya mahatmanah

If hundreds of thousands of suns rose up at once into the sky, they might resemble the effulgence of the Supreme Person in that universal form. gita 11.12

ஆயிரகணக்கான சூரியன்கள் வானத்தில் ஒரே நேரத்தில் தோன்றினால், அந்த ஜோதியானது பரம புருஷன் பகவானின் விச்வரூபத்துக்கு ஒருவேளை சமமாகலாம்.

மகாரதன் அர்ஜுனன் முன் தன் விஸ்வரூபத்தை காட்டுகிறார் இறைவன். பரமாத்வாவின் அந்த பயங்கரமான உருவத்தை பார்த்து உடல் நடுங்கி போகிறான் அர்ஜுனன். கோடானு கோடி பிரபஞ்சங்களும், அண்டசராசரங்களும் பரமசிவனார் பிரம்மதேவர் உட்பட கோடானு கோடி தேவர்களும் அசுரர்களும், சப்த ரிஷிகளும், பிரபஞ்சத்தில் உள்ள பல பல உயிரினங்களும் எம்பெருமானின் தெய்வீக தோற்றத்தில் காண்கிறான் அர்ஜுனன்.

ஹஸ்தினா புறத்தில் அரண்மையில் உள்ள சஞ்சயனும் இறைவனின் இந்த தெய்வீக விஸ்வரூபத்தை காண்கிறான்.அப்போது அவன் சொன்ன வார்த்தைகள்தான் மேலே உள்ளவை..



அமெரிக்க அரசாங்கம் முதல் முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய போது, அணு விஞ்ஞானி,robert oppenheimer அந்த அணுகுண்டு வெடிப்பும், அதன் ஒளியும் எப்படி இருந்தன என்பதை கீதையில் உள்ள இதே ஸ்லோகத்தை மேல்கோள் காட்டி சொன்னாராம்.

அனால், ஆயிரகணக்கான அணுகுண்டுகளை சூரியன் மீது ஏவினால், சூரியனின் சக்திக்கு அவை ஈடாகாது.. அனைத்தும் பயனற்று போகும்.. அந்த பகவானின் தெய்வீக ஒளியோ கோடானு கோடி சூரியனுக்கு ஒப்பாகும்!

இணையில்லாதவரே! நீர் ஒருவரே ஆகினும், இந்த அண்டசராசரங்கள், பிரபஞ்சங்கள் முழுதும் அனைத்திலும் பரவி இருக்கிறீர்! உன்னுடைய இந்த ரூபத்தை நான் காண்கையில், அனைத்தும் பிரபஞ்சமும் இதை கண்டு நடுங்கி கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன். கீதை 11.20

ஈடு இணையற்ற அந்த எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாவை சரணடைவோம் வாரீர்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக