தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, July 13, 2012

ஊர்திகளுக்கு தமிழில் எண் பலகை எழுதுவோம்!!




.."என்னுடைய வண்டியின் எண் பலகை முழுக்க முழுக்க தமிழ் உருக்களுடன் இருக்கும்"

இன்று பணியை முடித்துவிட்டு வரும் வேளையில், தேனாம்பேட்டை சந்திப்பை கடந்து செல்லும் போது இரு காவலர்களால் சுற்றி வளைக்கபட்டேன்

சுமார் 8 காவலர்கள் வரும் வண்டிகளை மடக்கும் வண்ணம் இருந்தனர், ஆனால் ஒருவர் கூட சந்திப்பில் உள்ள வாகன நெரிசலை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம இல்லை

முதலில் என் வண்டிக்கு உண்டான அனைத்தையும் கேட்டு பெற்று கொண்டனர், என்னுடைய ஓட்டுனர் உரிமத்தையும் கேட்டு பெற்று கொண்டனர், அனைத்தும் சரியாக இருந்ததால் எதுவும் அவர்களுக்கு அகப்படவில்லை, அவர்களுக்கு அகப்பட்டது என்னுடைய வண்டியின் எண் பலகை மட்டுமே

அதனை பார்த்தது காவலர் ஒருவர் "இப்படி எல்லாம் Number Plate எழுத கூடாது, 100ரூபாயை கொடுத்து விட்டு செல்" என்றார், நான் அதற்க்கு "காசு எல்லாம் கொடுக்க முடியாது, நீங்கள் சொல்வது போல் எடுத்து கொண்டால் கூட நீதிமன்ற உத்தரவே இருக்கு, வேணும்னா வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்" என்றேன், உடனே அங்கிருந்த அனைத்து காவலர்களும் என்னை சூழ்ந்து கொண்டனர்


எனக்கும் காவலர்களுக்கும் இடையேயான விவாதம் சுமார் 15நிமிடங்கள் நடந்தது, அதில் 6 காவலர்கள் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதா இல்லையா?? இவர்கள் என்ன விவாதித்து கொண்டிருக்கிறார்கள்?? என்று புரியாமலே விவாதத்தை பார்த்து கொண்டிருந்தனர்,

வழக்கம் போல ஒரு பெரிய தொப்பை கொண்ட காவலரே அதிக விவாதத்தில் ஈடுபட்டார், "இப்படி எல்லாம் நம்பர் போட்டா எங்களுக்கு எப்படி புரியும்?" என அவர் குரலை உயர்த்த, "உங்களுக்கு புரியலைன்னா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது" என நானும் குரலை உயர்த்த பொது மக்களின் பார்வையும் எங்கள் மீது திரும்பியது

"நீங்க எல்லாம் சட்டம் தெரியாமல் எப்படி தமிழக அரசு பணிகளில் இருக்கிறீர்கள்" என்று அவர்கள் காதில் விழும் வண்ணம் முனுமுனுத்து அங்கிருந்த காவலர்களை படம் பிடித்தேன், பின்னரே அவர்கள் சமாதான விவாதத்திற்கு வந்தனர், ஒரு காவலர் இன்னொரு காவலரின் காதில் "ராமதாஸ், திருமா" கூட தமிழ்ல தான் போட்டு இருப்பாங்க சார் என்று முனுமுனுத்ததும் என் காதில் விழுந்தது

இறுதியில் விவாதத்தில் ஈடுபட்ட காவலர் சிரித்து கொண்டே ஒரே திருக்குறளை சொல்லி, இதனை இன்னும் பரப்புங்கள் என அறிவுரை கூறி, என்னுடன் கை குலுக்கி என்னை உற்ச்சாக படுத்தி அனுப்பியதுதான் ஆச்சர்யம்


நான் விவாதத்தில் ஈடுபடவில்லை என்றால் இந்த சட்டம் தவறாகி இருக்குமோ!!!!

இந்த நகலை வேண்டுவோர் என்னுடைய மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும் agazhvaan.gg@gmail.com
 —

No comments:

Post a Comment