தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 ஜூலை, 2012

புறநானூறு - 74 ஆம் செய்யுள் ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்டிய ஒரு பாடல்!!


புறநானூறு - 74 ஆம் செய்யுள் ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்டிய ஒரு பாடல்.நாம் யார் ? நமது மரபு எத்தகையது என்பதற்கு சான்று.

போரில் தோற்ற சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை சிறை பிடிக்கப்படுகிறான்.சிறைக் கொட்டடியில் அவனுக்கு தாகம் எடுக்கிறது.சிறைக் காவலன் அசட்டையாக தாமதம் செய்து தண்ணீர் தருகிறான்.அவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடலே அது.பாடலின் பொருள் :

இறந்துப் பிறக்கும் குழந்தையை கூட அப்படியே புதைத்து விடாமல் வீர மரபில் பிறந்தது என்பதற்கு அடையாளமாக அதன் மார்பை வாளால் கீறி புதைக்கும் வீரத் தமிழ் மரபில் வந்த வீரன் தனக்கு அசட்டையாக நீரையும்,உணவையும் தரும் பகைவனிடம் பிச்சை கேட்டு உண்பான் என நினைக்கிறாயா ? என்று கேட்டு விட்டு உணவும்,நீரும் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் நீப்பதை விவரிக்கும் பாடல் வரிகள்.

உலகின் எந்த இனமும் இவ்விதமான பாடல் பெரும் பாக்கியத்தை பெறவில்லை.பாடல் வழி இன்னமும் வென்று வாழ்கிறான் இரும்பொறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக