தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 ஜூலை, 2012

திருநீறு - கோமயத்தாலுண்டாக்கப்படுவதற்குக் காரணம் (2)


யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை ***www.fb.com/thirumarai

திருநீறு - கோமயத்தாலுண்டாக்கப்படுவதற்குக் காரணம் (2)

பசுக்களின் உறுப்புக்களுள்:
பிரமவிட்ணுக்கள் கொம்புகளினடியினும்,
கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்களும் சராசர உயிர்வர்க்கங்களுங் கொம்புகளின் நுனியினும்,
மேலான சிரசிலே சிவபெருமானும்,
நெற்றிநடுவிலே சிவசத்தியும்,
மூக்கு நுனியில் எம்பெருமானராய சிவகுகக் கடவுளும்,
முக்கினுள்ளே வித்தியாதரரும்,
இரண்டுகன்னங்களின் நடுவிலே அசுவினி தேவரும், இரு கண்களிலே சூரிய சந்திரர்களும்
பற்களிலே வாயு தேவனும்,
ஒளியுள்ள நாவிலே வருணதேவனும்,
ஊங்காரமுடைய நெஞ்சிலே கலைமகளும்,
மணித்தலத்திலே இயமனும் இயக்கர்களும்,
உதட்டிலே உதயாத்தமன சந்திதேவதைகளும்,
கழுத்திலே இந்திரனும்,
முரிப்பிலே துவாதசாதித்தர்களும்,
மார்பிலே சாத்தியதேவர்களும்,
நான்கு கால்களிலே அநிலன் என்னும் வாயுவும்,
முழந்தாள்களிலே மருத்துவரும்,
குளம்பு நுனியிலே சர்ப்பர்களும்,
அதன் நடுவிலே கந்தருவர்களும்,
அதன் மேலிடத்திலே அரம்பை மாதரும்,
முதுகிலே உருத்திரரும்,
சந்துகடோறும் அட்டவசுக்களும்,
அரைப்பரப்பிலே பிதிர் தேவதைகளும்,
யோனியிலே சத்தமாந்தர்களும்,
குதத்திலே இலக்குமி தேவியும்,
வாலிலே சர்ப்பராசர்களும்,
வாலின் மயிரிலே ஆத்திகனும்,
மூத்திரத்திலே ஆகாயகங்கையும்,
சாணத்திலே யமுனை நதியும்,
உரோமங்களிலே மகா முனிவர்களும்,
வயிற்றிலே பூமிதேவியும்,
முலையிலே சகலசமுத்திரங்களும்
சடராக்கினியிலே காருகபத்தியமும்,
இதயத்திலே ஆகவனீயமும்,
முகத்திலே தக்கிணாக்கினியமும்,
எலும்பினுஞ் சுக்கிலத்தும் யாகத்தொழில் முழுவதும்,

எல்லா அங்கங்கள்தோறும் கலங்கா நிலையுள்ள கற்புடை மடவாரும் பொருந்தி யிருப்பார்கள்.

இப்பசுக்கள் சிவபெருமானது சந்நிதிக்கணுள்ள இடபதேவரின் பக்கத்திலிருந்தனவாம்.

இவற்றைச் சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டுப் பூமியிற் பிறக்கச் செய்தலால், ஆதியிலே பாற்கடலின் வழியாய்த் தோன்றிப் பூமியில் விளங்கினவென்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக