தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 8, 2012

நீண்டநேரமாகக் குளிரூட்டப்பட்ட அசைவ உணவா? -சாப்பிடாதீங்க!



நீண்டநேரமாகக் குளிரூட்டப்பட்ட அசைவ உணவா? -சாப்பிடாதீங்க!


உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே 'ஃப்ரிட்ஜ்'. ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.

நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

விஷமாகும் உணவு

இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்

உணவியல் வல்லுநர்கள். மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!

எளிதில் நோய் தாக்கும்

அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை.

அதேபோல் நாட்கணக்கில் சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

நன்றி: Nagoorkani Kade

No comments:

Post a Comment